வித்தியாசமான சுவைக்காக... சமயலறை கையேடு!

Kitchen Guide
For a different taste
Published on

ஜ்ஜி போட்ட பின் கடலைமாவு மீந்துவிட்டால் அதனுடன் மைதா மாவு, அரிசிமாவு, வெங்காயம், உப்பு சேர்த்து தோசை சுட்டால், தோசை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

ஜவ்வரிசியை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து, ஆறியதும் அதில் தயிர், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய் கடுகு சேர்த்து தாளித்து ஊறவிட்டால் வித்தியாசமான பச்சடி ரெடி.

சமைக்கும்போது எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்.

கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடிவைத்து சமையுங்கள்.

சோமாஸ் செய்யும்போது உள் வைக்கும் பூரணம் உதிராமல் இருக்க அத்துடன் சிறிது பாலைச் சேர்த்துக்கொண்டால் போதும்.

பூண்டு, வெங்காயம் போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

அரிசி உப்புமா செய்யும்போது அரிசி ரவையில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிப்பிசறி வைத்த பிறகு செய்தால் உப்புமா பொலபொலவென இருக்கும்.

குலோப் ஜாமூன் உட்புறம் வேகாமல் போனால், ஜீராவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி, குக்கர் உள்ளே வைத்து ஒரு விசில் சத்தம் வரும் வரை காத்திருந்து இறக்கவும். சூடான சுவையான, மிருதுவான குலோப் ஜாமூன் தயார்.

முருங்கைக்காயை அப்படியே ஃ ப்ரிட்ஜில் வைத்தால் உலர்ந்துவிடும். அதற்கு பதில் துண்டுகளாக்கி , காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால் உலர்ந்து போகாமல், நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்துவடை சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான சுவையில் 'தயிர் மிக்ஸ்ட் சோமாசி' செய்வது எப்படி?
Kitchen Guide

அரிசி, பருப்பு ஊறவைக்கும்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் ஜவ்வரசியை ஊறவைத்து அரைத்தால் தோசை மொறுமொறுவென்று இருக்கும்.

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து பின்பு ஃ ப்ரிட்ஜில் இரண்டு மணிநேரம் வைத்திருந்து சமைத்தால் கிழங்கு ஒன்றோடோன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

ரவை இட்லி போலவே கோதுமை ரவையிலும் இட்லி செய்யலாம்.

கோதுமை ரவையை வறுத்து, தயிரில் கலந்து, நெய்யில் கடுகு, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி கலந்து சுவை மிகுந்த இட்லி செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com