அவசர சமையலுக்கு: பத்தே நிமிடத்தில் வெந்தய சாதம்!

healthy recipes in tamil
For emergency cooking
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேவையான பொருட்கள்:

சாப்பாட்டு அரிசி - 200 கிராம்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

பூண்டு – ஐந்து பெரிய பற்கள்

சிறிய வெங்காயம்- 10

பெரிய வெங்காயம் -1

கறிவேப்பிலை – சிறிதளவு

வெந்தயம் - ஒரு ஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துண்டுகள்- நான்கு

தக்காளி – இரண்டு

பச்சை மிளகாய் -  இரண்டு

செய்முறை:

ரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். மூன்று முறை நன்றாக கழுவி விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். சீரகத்தையும் போட்டு பொரிக்கவும். தோல் உரித்து நறுக்கிய சின்ன, பெரிய வெங்காயம், பூண்டு, மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும்.

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள், தக்காளி, தேவையான உப்பு சேர்க்கவும். பின்பு அரிசியை சேர்த்து 4 டம்ளர் நீரூற்றி மூன்று விசில் விட்டு இறக்கவும்.  இப்போது சுவையான சத்தான வெந்தய சாதம் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com