
உருளைக்கிழங்கு அப்பம்
தேவை:
உருளைக்கிழங்கு - 3
பச்சரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்
இஞ்சி துருவல் - அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
மல்லித்தழை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும். தேங்காய் துருவல், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், தக்காளி இவற்றை அரைத்து கிழங்கில் சேர்க்கவும். பச்சரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, மல்லித்தழை, கிழங்கு கலவை எல்லாவற்றையும் கலந்து, இட்லி மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறு கரண்டியால் மாவை மொண்டு விட்டு, பொன்னிற அப்பமாக பொரித்து எடுக்கவும்.
ஜவ்வரிசி அப்பம்
தேவை:
சன்ன ஜவ்வரிசி - 1 கப்
பச்சரிசி மாவு - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
நெய் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தயிர் - 4 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
ஜவ்வரிசியை நெய் விட்டு வறுத்து, தேங்காய் பாலில் ஊற வைக்கவும். பிறகு நைசாக அரைத்து, அதில் உப்பு, அரிசி மாவு, மிளகு, சீரகத்தூள், தயிர், நறுக்கிய கருவேப்பிலை கலந்து இட்லி மாவு பதத்தில் தயார் செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறு கரண்டியால் மாவை மொண்டு விட்டு, பொரித்து, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும். சுவையான ஜவ்வரிசி அப்பம் தயார்.
பருப்பு இனிப்பு அப்பம்
தேவை:
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா கால்
வெந்தயம்- 1 ஸ்பூன்
வெல்லத் தூள் - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசி, பருப்புகளை ஊறவைத்து, அரைமணி நேரம் கழித்து, கெட்டியாக அரைக்கவும். அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கரண்டியால் மாவை மொண்டுவிட்டு, இனிப்பு அப்பங்களாக பொரித்து எடுக்கவும்.
உளுந்து அப்பம்
தேவை:
உளுந்தம் பருப்பு - 1 கப்
பச்சரிசி மாவு - 2 கப்
கடலை மாவு - அரை கப்
மிளகு சீரகத்தூள் -1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க - கடுகு
செய்முறை:
உளுந்தம் பருப்பை ஊறவைத்து, நைசாக அரைத்து, அதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகு சீரகத்தூள் சேர்த்து மூடி வைக்கவும். ஆறு மணி நேரம் கழித்து, மாவில் கடுகு, பெருங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துகொட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கரண்டியால் மாவை மொண்டுவிட்,டு அப்பங்களை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.