வித்தியாசமான நாலு வகை பட்டாணி ரெசிபிகள்!

Four different types of pea recipes
Pea recipes...
Published on

பட்டாணி  பீஸ் மசாலா

தேவை:

பச்சை பட்டாணி - 1  கப் 

பெரிய வெங்காயம் - 1

தேங்காய் துருவல் - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

தனியா - 3 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 4  

சோம்பு, கசகசா - தலா ஒரு ஸ்பூன் 

முந்திரிப் பருப்பு - 8 

தாளிக்க - கறிவேப்பிலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை: 

முந்திரிப் பருப்பையும், அரை கப் தேங்காய் துருவலையும் அரைக்கவும். தனியா, கசகசா, சோம்பு, பச்சை மிளகாய் இவற்றையும் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி, அரைத்த விழுதுகளை சேர்த்து, மீதி தேங்காய் துருவலில் பால் பிழிந்து, ஊற்றி பட்டாணியை சேர்த்து, உப்பு போட்டு வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு கலக்கவும். சுவையான பட்டாணி பீஸ் மசாலா தயார்.

காய்ந்த பட்டாணி குருமா

தேவை:

 காய்ந்த பட்டாணி - 1 கப் 

பூண்டு - 4 பல் 

வர மிளகாய் - 4

நறுக்கிய வெங்காயம் - 1

கசகசா - ஒரு டேபிள் ஸ்பூன் 

தேங்காய் துருவல் - அரை கப் 

பெரிய வெங்காயம் - 1

தனியா - 2 டேபிள்ஸ்பூன் 

மல்லித்தழை - சிறிது 

தாளிக்க - பட்டை, கிராம்பு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 

காய்ந்த பட்டாணியை இரண்டு மணிநேரம் வெந்நீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் 20 நிமிடம் வேக வைக்கவும். மிளகாய், பூண்டு, தனியாவை சிறிது நீர் விட்டு ‌‌அரைக்கவும்.‌ வாணலியில் எண்ணெய்விட்டு, பட்டை, கிராம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுது, வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து, தேவைக்கேற்ப நீர் சேர்த்து, கொதி வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கி வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
கேரளா ஸ்பெஷல் பாலடை பாயாசம் சாப்பிட்டதுண்டா?
Four different types of pea recipes

பட்டாணி பாத் 

தேவை:

பச்சை பட்டாணி - 1 கப் 

ரவை - 1 கப் 

சேமியா - அரை கப்

நெய் - 2 ஸ்பூன் 

பெரிய வெங்காயம் - 1

 பச்சை மிளகாய் - 1 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் 

தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 

ரவை சேமியா 2ஐயும் வாணலியில் சிறிது நெய் விட்டு வறுத்து எடுத்துவிட்டு, மீதி உள்ள நெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி, வதக்கி, பட்டாணி சேர்த்து, இரண்டு கப் நீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும். பட்டாணி வெந்ததும், ரவை, சேமியாவை தூவி, கிளறி, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி வைக்கவும். சுவையான பட்டாணி பாத் ரெடி.

பட்டாணி கரம் மசாலா 

தேவை:

பச்சை பட்டாணி - 1 கப்  

பெரிய உருளைக்கிழங்கு, வெங்காயம் -  தலா ஒன்று 

தக்காளி - 2

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - 2 பல் 

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 

மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை ஸ்பூன்

தாளிக்க - சோம்பு ஒரு ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய சமச்சீர் உணவு வகைகள்..!
Four different types of pea recipes

செய்முறை: 

பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கை வேகவைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசிக்கவும். வெந்த பட்டாணியை சிறிது மசிக்கவும். வெங்காயம் தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை சிறிது நீர் விட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். வெந்த பட்டாணி, உருளைக்கிழங்கைப் போட்டு, தேவைக்கேற்ப நீர் விட்டு, உப்பு சேர்க்கவும். கொதித்ததும், கரம் மசாலா தூள், மல்லித்தழை தூவி இறக்கிவைக்கவும். இது பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிக சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com