உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய சமச்சீர் உணவு வகைகள்..!

ஜூன் 18- அறுசுவை உணவு தினம்!
Balanced foods
Healthy foods
Published on

றுசுவைக்கும் நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அறுசுவைகள் தரும் நன்மைகள் என்னென்ன? என்பதை தெரிந்துகொள்ளலாம். "உணவே மருந்து மருந்தே உணவு " என்கிறார் திருவள்ளுவர். அந்த வகையில், அறுசுவைக்கும் நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நமது பாரம்பரியத்தில் மட்டும்தான், 'அறுசுவை விருந்து, அறுசுவை உணவு' என்பது உண்டு. வேறு எந்த நாட்டிலும் இந்த வார்த்தைகளை கூட கேட்க முடியாது.

அறுசுவை என்னென்ன?: இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு என்ற அறுசுவையை நாம் வெறும் சுவைக்காக மட்டுமே பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் இருக்கும் குணங்களை நாம் கண்டுகொள்வதில்லை. இந்த அறுசுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. அதன்படி, அறுசுவைகளின் குணங்களையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

இனிப்புச் சுவை: அறுசுவைகளில்  உடலுக்கு ஆற்றலை வழங்கும் சுவை, எல்லா தாதுக்களையும் உடலில் வளர்ப்பது இதுதான். உடற்பொழிவு மற்றும் நீண்ட ஆயுளை தருவதும் இனிப்பு சுவைதான். வாத பித்தம் போக்கும், நஞ்சையும், நாவறட்சியையும் போக்கும். பெரும்பாலானோருக்கு பிடித்த சுவை பட்டியலில் இனிப்பு முதல் இடத்தில் இருக்கும் என்றே சொல்லலாம். அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற கிழங்கு வகைகளை, பழவகைகளில் இயற்கையான இனிப்பு சுவை அதிக அளவில் உள்ளது.

கீரை வகைகளில் அரைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை. எண்ணெய் வித்துக்களில் எள், நிலக்கடலை மசாலா பொருட்களில் சோம்பு, கசாசா காய்கறிகளில் பூசணி, பீர்க்கங்காய், வெள்ளரி கூட இனிப்பு சுவையை கொண்டது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

இனிப்பு சுவை, மனதிற்கும் உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடியதாக இருக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு இயற்கையான இனிப்பு அவசியமாக உள்ளது. இனிப்பு சுவை எளிதில் செரிமானம் ஆகாது. இது உடலில் அதிகரிக்கும்போது சோம்பல், உடற்பருமன் மற்றும் நோய்களை வரவழைக்கும்.இது அதிகமாயின் உடல் சோர்வு, தளர்வு, இருமல், அதிகத் தூக்கம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
டேஸ்ட்டி வெஜ் மிக்ஸ்ட் சோளப் பணியாரம்!
Balanced foods

துவர்ப்புச் சுவை: உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற சுவையாக இருப்பது துவர்ப்பு சுவைதான். மாதுளை, மஞ்சள், அத்திக்காய், வாழைக்காய், மாவடு போன்ற காய் வகைகளில் துவர்ப்பு சுவை அதிகம் காணப்படுகிறது. உடலில் சரியான அளவு துவர்ப்பு, அதிக வியர்வை, ரத்தப் போக்கு, வயிற்று போக்கினை சரி செய்கிறது. இதுவே, அதிகமானால், சரளமாக பேசுவதை பாதிப்பதோடு, இளமையில் முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் வாத நோய்களை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

காரம்: பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானத்திற்கு காரச் சுவை உதவுகிறது. மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், கடுகு, மிளகு போன்றவற்றில் இயற்கையாக காரம் அடங்கியுள்ளது. இவை, அதிகப்படியான நீரை வெளியேற்றவும், உடல் இளைக்கவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும், தோல் நோய்களை தடுக்கவும் உதவுகிறது. இதனை அதிகளவில் எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை அதிகரிப்பது, குடல் புண்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

கசப்புச் சுவை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் வெறுக்கப்படும் சுவையாக கசப்பு இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இதுவாகதான் இருக்கிறது. அறுசுவைகளில் கசப்பை நாம் அறவே நீக்குவதால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்கிறார்கள் . இது இயற்கையாக, பாகற்காய், வெந்தயம், பூண்டு, வேப்பம்பூ, சுண்டக்காய், அதலக்காய் போன்ற காய்கறிகளில் கிடைக்கின்றது. கசப்புச்சுவை, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும், உடல் எரிச்சல் இருந்து நிவாரணம் தருகிறது. கூடுதலாக, இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. கசப்பை அதிகமாக உட்கொண்டால், எலும்புகளை பாதிப்பது முதல் உச்சக்கட்டமாய் நினைவாற்ற நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

புளிப்புச்சுவை: உணவிற்கு மேலும் ருசி சேர்ப்பது புளிப்புச்சுவை. இவை, பசியுணர்வைத் தூண்டுவதோடு, நரம்புகளை வலுப்பெறச் செய்வது, செரிமானம் மற்றும் இதயத்திற்கு நன்மைகளை தருகின்றது. எலுமிச்சை, இட்லி, தோசை, புளி, மாங்காய், தயிர், மோர் மற்றும் அன்னாசிப்பழம், தக்காளி மற்றும் சிட்ரஸ் பழங்களில் புளிப்புச்சுவை உள்ளது. இது அதிகமானால், நெஞ்செரிச்சல், இரத்த கொதிப்பு, அரிப்பு, பற்களைப் பாதிக்கும்.

இதையும் படியுங்கள்:
சாஃப்டான சப்பாத்திக்கு டேஸ்டியான சைடு டிஷ் இதோ..!
Balanced foods

உவர்ப்புச் சுவை: புளிப்புச் சுவை போலவே பசி மற்றும் செரிமான மேம்பாட்டிற்கு உப்பு சுவை முக்கியமானதாக உள்ளது. பொதுவாக உவர்ப்பு சுவை உப்பில் மட்டுமே இருப்பதாக சொல்லப்பட்டாலும், இயற்கையாக வாழைத்தண்டு, பூசணிக்காய், சுரைக்காய் போன்றவற்றிலும் உள்ளது.  இவை, உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதோடு செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இவை அதிகமானால், தோல் சுருக்கம் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com