தர்பூசணி சூப்
தேவையான பொருட்கள்:
தர்பூசணி விதைகள் நீக்கியத்துண்டுகள் _ 3 கப்
தக்காளி _1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் _ 1 (நறுக்கியது)
சுக்கு பொடி _1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு _1 ஸ்பூன்
புதினா இலைகள் _6
உப்பு _ தேவையான அளவு
கடுகு _1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் _ 1/2 ஸ்பூன்
செய்முறை: தர்பூசணி துண்டுகளை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். அதனுடன் நறுக்கப்பட்ட தக்காளி, பச்சை மிளகாய், சுக்கு பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சூடாக்கி கடுகு தாளித்து, சூப்பில் சேர்க்கவும். கடைசியாக புதினா இலைகள் போட்டு அலங்கரிக்கவும்.
ஆப்பிள் கேரட்சூப்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் _ 2 (துண்டுகளாக வெட்டியது)
கேரட்_2 (தோல் சீவி வெட்டியது)
வெங்காயம் _ 1 (நறுக்கியது)
சென்னா மிளகாய் _1 சிறிய துண்டு
சுக்குபொடி _1/4 ஸ்பூன்
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
எண்ணெய் _1 ஸ்பூன்
உப்பு, தண்ணீர் _தேவைக்கு
கிரீம் _ சிறிது
செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் கேரட், ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இத்துடன் மிளகுத்தூள், சுக்குபொடி, சென்னா மிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து துண்டுகள் நன்கு மிருதுவான பிறகு இதை மிக்ஸியில் அரைத்து மென்மையான சூப் பதத்திற்கு வந்ததும் மீண்டும் அடுப்பில் வைத்து தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும் சூப்பை பரிமாறும் முன் சிறிது கிரீம் சேர்த்து அலங்கரிக்கவும்.
ஆப்பிளின் இனிப்பு மற்றும் கெரட்டின் சுவை ஒன்றாக கலந்து சூப் மிகவும் சுவையாக இருக்கும்.
எள்ளுப்பொடி சூப்
தேவையான பொருட்கள்:
முருங்கை இலை _1கப்
தக்காளி நன்றாகப் பழுத்தது _1
பூண்டு _4 பல்
வறுத்த வேர்கடலைப் பொடி_1 ஸ்பூன்
வறுத்த எள் பொடி _1 ஸ்பூன்
பிரட் தூள் _1 ஸ்பூன்
மிளகுத்தூள் _1/2 ஸ்பூன்,
உப்பு _ தேவைக்கு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதில் கீரையைக் கொட்டி 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதில் பூண்டை தட்டி போடவும். அதற்குள் தக்காளியை நன்றாகக் கையால் பிசைந்து எள்பொடி, கடலைப் பொடி, உப்பு, மிளகு கலந்து அதில் கீரை வேகவைத்த தண்ணீரைச் சூடாக வடித்து நன்றாக கரண்டியால் கலக்கி, கடைசியாக பிரட் தூள் போட்டு பரிமாறவும். எளிதில் தயாரிக்க கூடிய சுவையான சூப் ரெடி.
கிரீன் கிராம் சூப்
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு _100 கிராம்
கொள்ளு _50 கிராம்
சின்ன வெங்காயம் _சிறிது
இஞ்சி, பூண்டு விழுது _1 ஸ்பூன்
மிளகு _10 கிராம்
நெய் _1 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
செய்முறை: பச்சை பயிறையும் கொள்ளையும், முதல் நாள் இரவு ஊறவைக்கவும். தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சிறிது நெய்யை விட்டு 5 நிமிடங்கள் வதக்கி பின் குக்கரில் போடவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகை இரண்டாக உடைத்துப் போட்டு தண்ணீர் பாதியளவு விட்டு குக்கரில் 8 விசில் விடவும். ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்தால் மணத்துடன் கூடிய சத்தான கிரீன் கிராம் சூப் தயார்.