French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு, சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். நீங்கள் ஒரு ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், பிரெஞ்சு டோஸ்ட் சரியான தேர்வாகும். சரி வாருங்கள் இந்த பதிவில் சூப்பரான சுவையல் பிரெஞ்ச் டோஸ்ட் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
4 முட்டைகள்.
1 கப் பால்.
1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
உப்பு சிறிதளவு
எட்டு ரொட்டி துண்டுகள்
வெண்ணெய் சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை, பால், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்ததாக நான் ஸ்டிக் தவா ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிதளவு வெண்ணெய் சேர்க்கவும்.
இப்போது ஒரு துண்டு ரொட்டியை எடுத்து, முட்டை கலவையில் தோய்த்து, 15 வினாடிகளுக்கு ஊற வைக்கவும். முட்டை கலவை ரொட்டியில் அதிகம் ஊறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஊறவைத்த ரொட்டியை, தவாவில் வைத்து இருபுறமும் சுமார் 3-5 நிமிடங்களுக்கு சுட்டெடுக்கவும். மீதமுள்ள ரொட்டித் துண்டுகளையும் இதே போல செய்ய வேண்டும்.
அவ்வளவுதான் சூப்பர் சுவையில் பிரெஞ்சு டோஸ்ட் தயார். இதன் மேல் உங்களுக்கு பிடித்த பழங்கள், மேப்பில் சிரப், சர்க்கரை தூள், கிரீம் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குறிப்புகள்: நல்ல தரமான, ஒரு நாள் பழமையான ரொட்டித் துண்டுகள் பிரெஞ்ச் டோஸ்ட் செய்ய சரியானவை. நீங்கள் விரும்பும் எந்த ரொட்டியையும் இதற்கு பயன்படுத்தலாம். கோதுமை ரொட்டி பயன்படுத்தி செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது.
அசைவம் சாப்பிடாதவர்கள் தாவர அடிப்படையிலான பால் மற்றும் முட்டைகளுக்கு பதிலாக பிசைந்த வாழைப்பழங்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதன் சுவையும் நன்றாகவே இருக்கும். பாலே இல்லாத பட்சத்தில் தண்ணீரும் சேர்த்து தயாரிக்கலாம்.