ஓவன் இருக்கா? அப்போ இந்த 3 ரெசிபிகளையும் மிஸ் பண்ணிடாதீங்க!

healthy recipes
Fried potatoes
Published on

வனில் செய்யப்படும் உணவுகள் எல்லாம் சற்று கடினம் என்று என்னுபவர்களுக்குத்தான் இந்த சுவையான ரெசிபிகள்.

ரோஸ்மேரி உருளைக்கிழங்கு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றுதான் உருளைக்கிழங்கு. அந்த வகையில் உருளைக் கிழங்கைப் பயன்படுத்தி சுவையான ரோஸ்மேரி உருளைக்கிழங்கு ரெசிபி செய்வதைப் பற்றி பார்ப்போம்.

250 கிராம் ப்ரெட் மாவு எடுத்துக்கொண்டு அதில் ஈஸ்ட், உப்பு, ரோஸ்மேரி மற்றும் தண்ணீர் கலந்து ஐந்து நிமிடங்கள் கலக்கவும். அதனை ஈரத் துனியால் ஒரு பாத்திரத்தில் மூடி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பேக்கரி ஸ்டைல் பட்டர் வெஜ் கேக் செய்வது எப்படி?
healthy recipes

பின்னர் மசித்த உருளைக்கிழங்கை மாவுடன் கலந்து மீண்டும் ஈரத்துணி வைத்து 1.30 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்னர் அந்த மாவை சமமாகப் பிரித்து உருண்டைகளாக ஆக்கியப்பின்னர் ஒரு பேக்கிங் ஷீட்டில் வைத்து மேலே சிறிது மாவு தூவிவிட்டு துணி வைத்து 1 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். 200 டிகிரி வெப்பத்துக்கு ஓவனை ஃப்ரீ ஹீட் செய்யவும். ஒவ்வொரு உருண்டைகளையும் ஒரு கீரு கீரி ஓவனில் 45 நிமிடங்கள் வைத்து எடுத்தால் ரோஸ்மேரி உருளைக்கிழங்கு ரெசிபி ரெடி.

பிடா ப்ரெட் சிப்ஸ்

healthy recipes
பிடா ப்ரெட் சிப்ஸ்cookpad.com

முதலில் இதற்கு பிடா ப்ரெட் செய்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை கலக்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பின்னர் ஈஸ்ட் சேர்த்து கலக்கவும். அதனுடன் மைதா மாவு சேர்த்து  பத்து  நிமிடங்கள் பிசைந்து சிறிது என்ணெய் சேர்த்து மூடி வைக்க வேண்டும். மாவு நன்றாக கெட்டியாகும் வரை ஊரவைக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாவைப் பிரித்து உருட்டி சப்பாத்திப் போல் செய்து சமைக்கவும்.

பிடா ப்ரெட் கடைகளில் ரெடிமெட் ஆகவும் கிடைக்கும். பிடா ப்ரெட் தனியாக வைத்துவிடவும்.

பிறகு ஓவனை ஒரு 200 டிகிரி செல்சியஸ் அளவில் ஃப்ரீ ஹீட் செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், பூண்டு, தோட்டப்பூண்டு என்று அழைக்கப்படும் செர்வில், துளசி மற்றும் மிளகுத் தூள் ஆகியவை கலக்க வேண்டும். இந்த கலவையை பிடா ப்ரெட் மீது தடவி ஏற்கனவே வெப்பத்துடன் இருந்த ஓவனில் வைத்து 7 நிமிடங்கள் கழித்து எடுத்தால் பிடா ப்ரெட் உருளைக்கிழங்கு ரெசிப்பி தயார்.

வறுத்த உருளைக்கிழங்கு குடமிளகாய் ரெசிபி

healthy recipes
வறுத்த உருளைக்கிழங்கு குடமிளகாய் ரெசிபி cookpad.com

முதலில் ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் , உப்பு, மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து அதனுடன் இனிப்பு உருளைக்கிழங்கு குடமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். ஏற்கனவே 200 டிகிரி செல்சியஸ் ஃப்ரீ ஹீட் செய்த ஓவனில் ஒரு 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு குடமிளகாய் ரெசிபி தயார். ஓவன் பயன்படுத்தாதவர்கள் தோசைக்கல்லும் பயன்படுத்தலாம்.

-பாரதி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com