விளாம்பழ ஜூஸ் முதல் ஸ்பெஷல் ரைஸ் வரை... ரெசிபி ரகசியம்!

special recipes in tamil
vilampazha juice
Published on

விளாம்பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்:

விளாம்பழம் – 1

தேன் – 4 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை: விளாம்பழத்தை உடைத்து  உள்ளே உள்ள புளிப்பு சதைப்பகுதியை எடுத்து கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக  கலக்கவும். கட்டிகள் இருக்காதபடி வடிகட்டி எடுக்கவும். தேன், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குளிரவைத்து பரிமாறவும்.

விளாம்பழ பச்சடி

தேவையான பொருட்கள்:

விளாம்பழசதை – 1 கப்

வெல்லம் – ½ கப்

மிளகாய்தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சில

எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை: வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைக்கவும். பாத்திரத்தில் விளாம்பழ சதை + வெல்ல நீரை சேர்த்து சுண்டி வரும் வரை கிளறவும். உப்பு, மிளகாய்தூள் சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். நன்றாக கலந்து பரிமாறவும்.

விளாம்பழ ரைஸ்

தேவையான பொருட்கள்:

வெந்தசாதம் – 2 கப்

விளாம்பழசதை – ½ கப்

பச்சைமிளகாய் – 1

இஞ்சி துருவல் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்

வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கியது)

கறிவேப்பிலை – சில

செய்முறை: கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும். விளாம்பழ சதை + உப்பு சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும். வெந்த சாதத்தை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். ஒரு புளிப்பு-காரம் ருசியான ரைஸ் தயார்!

இதையும் படியுங்கள்:
கர்நாடகா கோயில் ஸ்பெஷல் - பருப்பு இல்லாத சுவையான சாம்பார்!
special recipes in tamil

விளாம்பழ நெய் ஹல்வா 

தேவையான பொருட்கள்;

விளாம்பழசதை – 1 கப்

நெய் – 4 டீஸ்பூன்

சர்க்கரை – ¾ கப் 

வெல்லம் – 2 டீஸ்பூன்

ஏலக்காய்தூள் – ¼ டீஸ்பூன்

முந்திரி – 8–10 (நெய்யில் வறுத்தது)

நீர் – ¼ கப் (தேவைக்கேற்ப)

செய்முறை: விளாம்பழத்தை உடைத்து உள்ளே உள்ள சதையை எடுக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கைகளால் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று அடித்து கட்டிகள் இல்லாமல் மென்மையாக செய்யவும். தேவையெனில் வடிகட்டி வைக்கவும். ஒரு கனமான வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும். விளாம்பழ சதை சேர்த்து 3–4 நிமிடம் வதக்கவும். அதன் பின் சர்க்கரை + வெல்லம்  சேர்த்து நன்றாக கலக்கவும். சர்க்கரை கரைந்து கலவை கெட்டியாக மாறும் வரை மெதுவாக கிளறவும்.

இதையும் படியுங்கள்:
சமையலறை தாண்டி... இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் இதர பயன்கள்!
special recipes in tamil

கலவை கெட்டியாக ஆரம்பித்ததும் மீதமுள்ள நெய்யை 2–3 முறைப் பிரித்து சேர்க்கவும். நெய் பிரிந்து ஓரங்களில் வர ஆரம்பித்தால் ஹல்வா சரியாக வந்தது என்று அர்த்தம். ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும். ஹல்வாவை ஒரு தட்டில்  ஊற்றி சமமாக பரப்பவும். 15 நிமிடம் குளிர்ந்தவுடன் துண்டுகளாக நறுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com