குழந்தைகள் விரும்பி சாப்பிடும் Fruit Fried Rice செய்யலாம் வாங்க! 

Fruit Fried Rice
Fruit Fried Rice
Published on

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளைக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் முக்கியமான கடமையாகும்.‌ ஆனால், பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மறுக்கிறார்கள். குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களைக் கொடுப்பது மிகவும் முக்கியம். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

சில குழந்தைகள் நேரடியாக பழங்களை சாப்பிடக் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். இருப்பினும் அவர்களது உணவில் பழத்தை சேர்க்க புதிய வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, இந்தப் பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய Fruit Fried Rice எப்படி செய்வது எனப் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • 2 கப் பாஸ்மதி அரிசி

  • 2 1/2 கப் தண்ணீர்

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • 1/2 டீஸ்பூன் உப்பு

  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை

  • 1/4 டீஸ்பூன் கடுகு

  • 1 சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கியது

  • 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது

  • 1/2 கப் கேரட், பொடியாக நறுக்கியது

  • 1/2 கப் பட்டாணி

  • 1/2 கப் apple, பொடியாக நறுக்கியது

  • 1/4 கப் திராட்சை

  • 1/4 கப் முந்திரி

  • 1/4 டீஸ்பூன் சீரகம் தூள்

  • 1/4 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்

  • 1/4 டீஸ்பூன் உப்பு

  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கியது

செய்முறை: 

பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த அரிசியை அதில் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வையுங்கள். 

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் ஸ்டைலில் அரிசி பருப்பு சாதம்: சுவை, மணம், ஆஹா!
Fruit Fried Rice

அரிசி வேகும் வரை, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர், வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதங்கியதும் கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து ஐந்து நிமிடங்கள் லேசாக வதக்கவும். இப்போது ஆப்பிள், திராட்சை, மாதுளை, அன்னாசி போன்ற பழங்களை சேர்த்து கிளறி விடுங்கள். 

பின்னர், வேகவைத்த அரிசியை அதில் சேர்த்து நன்கு கிளறியதும் சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், சூப்பரான சுவையில் ஃப்ரூட் ப்ரைட் ரைஸ் தயார். 

Fruit Fried Rice ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். இதை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த செய்முறையை முயற்சித்துப் பார்த்து உங்கள் குடும்பத்தினருடன் ருசித்து மகிழுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com