
இன்றைக்கு சுவையான மாம்பழ கேசரி மற்றும் நேந்திரம் பழக் கட்லெட் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
மாம்பழ கேசரி செய்ய தேவையான பொருட்கள்.
மாம்பழம்-1
நெய்-1/4 கப்
எண்ணெய்-2 தேக்கரண்டி
பாதாம்-10
முந்திரி-10
திராட்சை-10
ரவை-1/2 கப்
சர்க்கரை-1 கப்
மாம்பழ கேசரி செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் ¼ கப் நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொண்டு அதில் பாதாம் 10, முந்திரி10, திராட்சை 10 நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அதே நெய்யில் ½ கப் ரவை சேர்த்து நன்றாக வறுத்து விட்டு அதில் 2 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். இதில் 1 மாம்பழத்தை நன்றாக பேஸ்டாக அரைத்து உள்ளே சேர்த்துக் கொள்ளவும்.
இதில் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது இதில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிளறிய பிறகு கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான மாம்பழ கேசரி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
நேந்திரம் பழ கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்
நேந்திரம் பழம்-2
நெய்-2 தேக்கரண்டி
முந்திரி-10
துருவிய தேங்காய்-1/4 கப்
நாட்டுச்சர்க்கரை-1/2 கப்
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி
சோளமாவு-1 தேக்கரண்டி
பிரட் கிராம்ஸ்-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
நேந்திரம் பழ கட்லெட் செய்முறை விளக்கம்.
முதலில் நேந்திரம் பழம் 2 எடுத்து இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஃபேனில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி 10, துருவிய தேங்காய் ¼ கப், நாட்டுச்சர்க்கரை ½ கப் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் மசித்து வைத்திருக்கும் நேந்திரம் பழத்தையும் சேர்த்து கிளறிவிடவும். இதனுடன் ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது சோளமாவு 1 தேக்கரண்டியில் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். அதில் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை முக்கி பிரெட் கிரம்ப்ஸில் சேர்த்து எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான நேந்திரம் பழ கட்லெட் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.