வேற லெவல் டேஸ்டில் சுண்டைக்காய் மசாலா வடை - சந்தகை சர்பத் ரெசிபிஸ்!

Sundakkai Masala Vada-Sandagai Sorbat R
Sundakkai Masala Vada-Sandagai Sorbat R
Published on

ன்றைக்கு சுவையான சுண்டைக்காய் மசால் வடை மற்றும் சந்தகை சர்பத் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

சுண்டைக்காய் மசாலா வடை செய்ய தேவையான பொருட்கள்.

சுண்டைக்காய்-2 கைப்பிடி

எண்ணெய்-தேவையான அளவு

கடலைப்பருப்பு-1 கப்

இஞ்சி-1 துண்டு

பூண்டு-4

சோம்பு-1 தேக்கரண்டி

உப்பு-தேவையான அளவு

கருவேப்பிலை-சிறிதளவு

கொத்தமல்லி- சிறிதளவு

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-1

சுண்டைக்காய் மசாலா வடை செய்முறை விளக்கம்.

இரண்டு கைப்பிடி சுண்டைக்காயை நன்றாக கழுவி விட்டு, கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இப்போது இதை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவு ஊறவைத்த கடலைப்பருப்பு 1 கப்பை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் 1 துண்டு இஞ்சி, பூண்டு 4, சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்துவிட்டு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பவுலில் அரைத்த கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, அரைத்த சுண்டைக்காய் விழுது, தேவையான அளவு உப்பு சேர்ந்து கலந்து விட்டு வடை தட்டி எண்ணெய்யில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சுண்டைக்காய் மசால் வடை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லுங்க.

சந்தகை சர்பத் செய்ய தேவையான பொருட்கள்.

பச்சரிசி-100 கிராம்

நாட்டுச்சர்க்கரை-தேவையான அளவு

தேங்காய்ப் பால்-4 டம்ளர்

சப்ஜா விதை-2 தேக்கரண்டி

உப்பு-1 சிட்டிகை

ஐஸ் கட்டி-தேவையான அளவு

சந்தகை சர்பத் செய்முறை விளக்கம்.

முதலில் பச்சரிசி 100 கிராமை ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து இட்லியாக ஊற்றி எடுக்கவும். சூடாக இருக்கும் போதே சந்தகை மனையில் பிழியும் போது அரிசி சந்தகைக் கிடைக்கும். இப்போது ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் சிறிதாக நறுக்கிய சந்தகை, காய்ச்சி வைத்திருக்கும் நாட்டுச் சர்க்கரை, ஊற வைத்த சப்ஜா விதை 2 தேக்கரண்டி, தேங்காய்ப் பால் 4 டம்ளர் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இப்போது இதில் தேவையான அளவு ஐஸ்கட்டிகள் சேர்த்து குளுகுளுவென்று பரிமாறினால் சந்தகை சர்பத் தயார். நீங்களும் வீட்டில் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரைப் ண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான பூசணி கலவைக்கூட்டு - முள்ளங்கி சட்னி செய்யலாமா?
Sundakkai Masala Vada-Sandagai Sorbat R

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com