சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை மற்றும் எள் உருண்டை செய்முறைகள்!

healthy snacks in tamil
Full of nutrients snacks
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

சத்தான வேர்க்கடலை உருண்டை

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – 1 கிலோ

வெள்ளை எள் – 1 கிலோ

வெல்லம் – 1½ கிலோ

பொட்டுக்கடலை – ½ கிலோ

ஏலக்காய் தூள் – 2 ஸ்பூன்

நெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து வேர்க்கடலையை நன்றாக சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும். பாதி வறுக்கும்போது வெல்லப்பொடியின் பாதி அளவு சேர்த்து கலந்து மேலும் வறுத்து வைக்கவும்.

பிறகு எள்ளைப் போட்டு நன்றாக பொரிந்து வரும்படி வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் பொட்டுக் கடலையை போட்டு வறுத்து, அதனுடன் மீதி உள்ள வெல்லப்பொடியையும் சேர்த்து வறுத்து ஆற விடவும். ஆறிய பிறகு, வறுத்தவற்றை மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நைசாக பொடித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி வைத்துக்கொள்ளவும்.

பிறகு அந்த பொடித்த கலவையில் நெய் சேர்த்துக்கலந்து சிறு உருண்டைகளாக பிடித்து ஆறவிட்டுப் பிறகு Air Tight Container-ல் போட்டு வைத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு மாலை வேளையில் கொடுக்கக்கூடிய சத்தான, ஆரோக்கியமான உணவு!

விருப்பப்பட்டால்:

முந்திரி பருப்பு, பாதாம் பருப்பை வறுத்து கரகரப்பாக அரைத்து உருண்டை செய்வதில் சேர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஆலு டோஸ்ட் பிரட் இட்லி: காலை உணவுக்கான எளிய செய்முறை!
healthy snacks in tamil

எள் உருண்டை

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த கருப்பு எள் – 1 கிலோ

வேர்க்கடலை – ¼ கிலோ

பொடித்த வெல்லம் – 1½ கிலோ

ஏலக்காய்த் தூள் – சிறிதளவு

நெய் – 2 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு ஒரு கப்

செய்முறை:

சுத்தம் செய்த எள்ளை தண்ணீரில் அலசி வடித்து நன்றாக காயவைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எள்ளை இரு பாதியாக பிரித்து எடுத்து, பொரிந்து வரும் வரை வறுக்கவும்.

வறுக்கும்போது பொடித்த வெல்லம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.

அதேபோல் வேர்க்கடலையும் வறுத்து எடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளறி ஆறவிடவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து தட்டில் ஆறவிடவும். சிறிது கை பொறுக்கும் சூட்டில், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு சிறு உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். ஈரமில்லாத ஒரு சம்படத்தில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம்.