விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல்: ராகி கொழுக்கட்டை - பிடி கொழுக்கட்டை செய்யலாமா?

Ganesha Chaturthi Special: Let's make Ragi Kozhukattai and Pidi Kozhukattai?
Ganesha Chaturthi Special: Let's make Ragi Kozhukattai and Pidi Kozhukattai?Image Credits: YouTube
Published on

விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் சுவையான ராகி கொழுக்கட்டை மற்றும் பிடிக்கொழுக்கட்டை ரெசிபிஸ் வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யறதுன்னு பார்ப்போம்.

ராகி கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்;

நெய்-1 தேக்கரண்டி.

துருவிய தேங்காய்-1கப்.

சர்க்கரை-1கப்.

ஏலக்காய் பொடி-1/2 தேக்கரண்டி.

பொடியாக நறுக்கிய முந்திரி-10

பொடியாக நறுக்கிய பாதாம்-10.

ராகி-1கப்.

பால்- சிறிதளவு.

ராகி கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி நெய்விட்டு 1 கப் துருவிய தேங்காய், 1 கப் சர்க்கரை, பொடியாக நறுக்கிய முந்திரி 10, பாதம் 10, ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிண்டி இறக்கிவிடவும். இப்போது பூரணம் தயார்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை கொதிக்க விட்டு அத்துடன் சிறிது நெய், பால் சேர்த்து விட்டு 1 கப் ராகி மாவை சேர்த்து நன்றாக சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். இப்போது மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து அதனுள்ளே செய்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து நன்றாக மூடிவிடவும். இப்போது இதை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கொழுக்கட்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பிடி கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி மாவு-1 கப்.

பாசிப்பருப்பு-4 தேக்கரண்டி.

உப்பு-1 சிட்டிகை.

துருவிய தேங்காய்-1/4 கப்.

வெல்லம்-1 கப்.

ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.

நெய்-2 தேக்கரண்டி.

தண்ணீர்-2 ½ கப்.

இதையும் படியுங்கள்:
ருசியான திண்டுக்கல் தலப்பாகட்டி சோயா பிரியாணி வித் தேங்காய் சம்பல் செய்யலாம் வாங்க!
Ganesha Chaturthi Special: Let's make Ragi Kozhukattai and Pidi Kozhukattai?

பிடி கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1கப் அரிசி மாவை எடுத்துக்கொள்ளவும். அதை சற்று மிதமான சூட்டிலேயே வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் 4 தேக்கரண்டி பாசிப்பருப்பு வாசனை வரும்வரை வறுத்துவிட்டு 2 ½ கப் தண்ணீர் சேர்த்துவிட்டு  1 சிட்டிகை உப்பு சேர்த்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு பாதி வெந்ததும் 1 கப் வெல்லம், ¼ கப் துருவிய தேங்காய், 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள், 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளவும். இப்போது இந்த கலவை நன்றாக கொதித்து வந்ததும் வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவை சேர்த்துக்கொள்ளவும். மாவை கைவிடாமல் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது மாவை சிறு சிறு உருண்டைகளாக கையில் பிடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது இட்லி பாத்திரத்தில் இதை வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் டேஸ்டியான பிடி கொழுக்கட்டை தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com