இன்றைக்கு சுவையான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி சோயா பிரியாணி வித் தேங்காய் சம்பல் ரெசிபியை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
திண்டுக்கல் தலப்பாகட்டி சோயா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்;
சீரகசம்பா அரிசி-1 கப்.
சோயா-1 கப்.
பூண்டு-3
சின்ன வெங்காயம்-6
கொத்தமல்லி- சிறிதளவு.
இஞ்சி-1 துண்டு.
புதினா- சிறிதளவு.
பச்சை மிளகாய்-1
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
கிராம்பு-1
வெங்காயம்-1
தக்காளி-1
புதினா- சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
தயிர்-1/4 கப்.
எழுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி.
பிரியாணி மசாலா அரைக்க,
தனியா-1 தேக்கரண்டி.
மிளகு-1/2 தேக்கரண்டி.
பிரியாணி இலை-1
கிராம்பு-1
சோம்பு-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி.
திண்டுக்கல் தலப்பாக்கட்டு சோயா பிரியாணி செய்முறை விளக்கம்;
முதலில் சீரகசம்பா அரிசி 1 கப்பை ஊற வைத்துவிட்டு சோயா 1 கப்பை சுடுதண்ணீரில் ஊறவைக்கவும். இப்போது பிரியாணி மசாலாவிற்கு தனியா 1 தேக்கரண்டி, மிளகு ½ தேக்கரண்டி, பிரியாணி இலை 1, கிராம்பு 1, சோம்பு 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி ஆகியவற்றை அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது பூண்டு 3, சின்ன வெங்காயம் 6, கொத்தமல்லி சிறிதளவு, இஞ்சி 1 துண்டு, புதினா சிறிதளவு, பச்சை மிளகாய் 1 ஆகியவற்றை சேர்த்து விழுதாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 1 குழிக்கரண்டி சேர்த்து அதில் சோம்பு ½ தேக்கரண்டி, கிராம்பு 1 சேர்த்து பொரிய விட்டுவிட்டு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். இத்துடன் புதினா சிறிதளவு, அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளி 1, உப்பு தேவையான அளவு, பிரியாணி மசாலா 2 தேக்கரண்டி, தண்ணீர் வடிகட்டி சோயா 1 கப் சேர்த்துக்கொண்டு ¼ கப் தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
2 கப் தண்ணீர் ஊற்றி புதினா சிறிதளவு சேர்த்து செய்து வைத்திருக்கும் பிரியாணி மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து ஊறிய அரிசியை சேர்த்து எழுமிச்சை சாறு ½ தேக்கரண்டி சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேகவிடவும். அவ்வளவு தான். சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டி சோயா பிரியாணி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
தேங்காய் சம்பல் செய்ய தேவையான பொருட்கள்;
தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
சின்ன வெங்காயம்-8.
துருவிய தேங்காய்-1 கப்.
எழுமிச்சைப்பழ சாறு-1/2 மூடி.
தேங்காய் சம்பல் செய்முறை விளக்கம்;
முதலில் அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் 4 சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் கருவேப்பிலை சிறிதளவு, 8 சின்ன வெங்காயம் சேர்த்து விட்டு கலந்துவிடவும்.
இப்போது மிளகாயின் காம்பை எடுத்துவிட்டு மிளகாயை மட்டும் அம்மிக்கல்லில் வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது இத்துடன் சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இத்துடன் 1 கப் தேங்காய் சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ளவும். கடைசியாக எழுமிச்சைப்பழ சாறு ½ மூடி சேர்த்து நன்றாக இடித்து எடுக்கவும். அவ்வளவு தான். சுவையான தேங்காய் சம்பல் தயார். இதை சாதம், சப்பாத்தி என்று எதனுடன் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.