காக்சோ காரபுட்டு!

காக்சோ காரபுட்டு!
Published on

தேவையான பொருட்கள்:

ட்லி பானையில் வேக வைத்து எடுத்த உதிர்த்த மாவு, (கம்பு, கேழ்வரகு, சோளம் மாவு) பச்சைப் பட்டாணி (முளை கட்டியது), பச்சை முழு பயறு (முளை கட்டியது), கேரட், பீட்ரூட், உருளை ஒவ்வொன்றும் பெரிதாக ஒன்று, முட்டை கோசு துருவியது - 2 கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 1. கைப்பிடி பொடியாக்கியது, தேங்காய்த் துருவல் - அரை மூடி (சிறியது), பச்சை மிளகாய் -25 கிராம், (அவரவர் காரத்திற்குத் தகுந்தபடி), இஞ்சி - 1 சிறு துண்டு, கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி அளவு பொடியாக்கியது, முந்திரி (அ) வேர்க்கடலை - 1 கைப்பிடி அளவு, எலுமிச்சம்பழம் சிறியது 1, தாளிக்க தேவையான எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை 1 ஆர்க்கு.

செய்முறை:

முளைகட்டிய பச்சை பட்டாணி,  பச்சை பயறு, காய்கறிகள் துருவியது இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் நல்லெண்ணெய் மூன்று ஸ்பூன் ஊற்றி, அரிசி அரிசியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு, அது வதங்கியதும், கடுகு, உ.பருப்பு பொடியாக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, வேர்க்கடலை (அ) முந்திரி பருப்பு இவற்றையும், பச்சை மிளகாய் நுனியை மட்டும் இரண்டாகப் பிளந்து எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கியதும், அதில் வேக வைத்து எடுத்த பயறு, பட்டாணி, காய்கறி கலவையை அதில் கொட்டி கிளறி கொடுத்து நீர் சுண்டியதும், இட்லி பானையில் நீராவியில் வேகவைத்து எடுத்த, உதிரியாக்கப்பட்ட மாவை அதில் போட்டு, 2 அல்லது 3 நிமிடங்கள் அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். பின்பு இறக்கி வைத்து, அதில் தேங்காய் பூ, கொத்தமல்லி தழை, நெய் மூன்று ஸ்பூன் ஊற்றி, மீண்டும் நன்றாக சேர்மானம் ஆகும்படி கிளறிக் கொடுத்து, பறிமாறும்போது, பிடித்தால் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட்டு சாப்பிடவும். எலுமிச்சம்பழச் சாறு பிழியாமலும் சாப்பிடலாம்.

இது மிகவும் மாறுபட்ட ஒர் சுவையுடன் இருக்கும். இதன் மணமே நம்மை சாப்பிடத் தூண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com