
நெய்யப்பம் செய்யத் தேவையான பொருட்கள்:
மாவு பச்சரிசி- ஒரு கப்
வெல்லத்தூள் -ஒரு கப்
வாழைப்பழம் -நன்றாக பழுத்து துண்டங்கள் ஆக்கியது-1
தேங்காய்ப் பற்கள் -கால் கப்
ஏலக்காய்த்தூள்- அரை டீஸ்பூன்
நெய்- தேவையான அளவு
உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை:
ஊறவைத்த பச்சரிசியை மிக்ஸியில் இட்டு நன்றாக அரைக்கவும். அதனுடன் வெல்லப்பொடி மற்றும் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். அந்த மாவில் பழத்துண்டுகள், தேங்காய்ப்பல் மற்றும் ஏலப்பொடி சேர்த்து நன்றாக கலந்து அப்பக் குழிகளில் நெய் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்திருக்கும் இந்த மாவை சிறிது சிறிதாக குண்டு குண்டாக அழகாக ஊற்றி இரண்டு பக்கமும் நெய்விட்டு சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
இந்த நெய்யப்பத்தை அனைவரும் விரும்பி உண்பர். அதில் நெய் அதிகமாக இருப்பதால் உதட்டை மென்மையாக்கும். ஆதலால் எல்லோரும் அந்த நெய்யை உதட்டில் தேய்த்துவிட்டு சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
சேனை மசியல்:
செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்து துண்டங்கள் ஆக்கிய சேனைக்கிழங்கு- ஒரு பெரிய கப்
இஞ்சி பொடியாக நறுக்கியது- ஒரு துண்டு
பச்சை மிளகாய்- 3 கீறியது
எலுமிச்சைச் சாறு -அரை டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
தாளிக்க: கடுகு, வெந்தயம், காய்ந்த சிவப்பு மிளகாய் கிள்ளி யது-இரண்டு கருவேப்பிலை -ஒரு ஆர்க்கு தேங்காய் எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
குக்கரில் சேனைக்கிழங்குடன் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு மூன்று விசில்வரை வேக வைத்து மசித்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேனை மசியலில் கொட்டி நன்றாக கலக்கும்படி வேகவிட்டு சட்னி பதத்திற்கு எடுத்து வைக்கவும்.
சிறிது ஆறிய உடன் எலுமிச்சைசாறு கலந்து பரிமாறவும். சாம்பார், ரசத்திற்கு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும். செய்வது எளிது. காரசாரமாக போதுமான புளிப்புடன் வித்தியாச ருசியில் அசத்தும் இந்த மசியல். அதிக கோடையில் சிலர் அதிக மசாலாக்களை விரும்ப மாட்டார்கள். அதற்கு ஏற்ற டிஷ் இது.