
வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லை, உடனடியாக இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏதாவது செய்ய வேண்டுமென்றால், பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த இஞ்சி பூண்டு துவையல் செய்து பாருங்கள். சுவை நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 கப்
பூண்டு - 15 பல்
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 10
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறு துண்டு
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டு, உப்பு புளி காய்ந்த மிளகாய் அனைத்தையும் போட்டு வதக்கவும்.
பின்னர் அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி சூடு தணியும் வரை ஆறவிடவும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து போதிய அளவு உப்பு, வெல்லம், தண்ணீர் சேர்த்து மைய அரைக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான கெட்டித் தன்மைக்கு இதை அரைத்துக் கொள்ளலாம். தண்ணீர் அதிகம் விட்டு சட்னி போலவும் செய்து கொள்ளலாம்.
இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்து கலக்கினால், சுவையான இஞ்சி பூண்டு துவையல் தயார்.
இதை அவசர காலத்தில் உடனடியாக செய்ய வேண்டும் என்றால் உறவினர்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ செய்து இட்லி தோசையுடன் பரிமாறலாம்.
இதன் சுவை நீங்கள் நினைப்பதை விட அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.