Gongura Leaf Chutney
Gongura Leaf Chutney

புளித்த கீரை சட்னி! (கோங்குரா இலை சட்னி)

Published on

ந்த இலை, மூன்று மூன்றாகச் சேர்ந்தாற் போலிருக்கும். இந்தக் கீரையைப் பறித்து, நரம்பில்லாமல் ஆய்ந்து வைத்துக்கொள்ளவும். அப்படி ஆய்ந்ததாக, சுமார் 2 குத்துகள் கீரை இருந்தால், அதற்குக் கீழ்க் கண்டுள்ள சாமான்கள் தேவை.

தேவையான சாமான்கள்: மிளகாய் வற்றல் 4, பச்சைமிளகாய் 6, வெந்தயம்1/2 டீஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு 1, கடுகு ½ டீஸ்பூன், மஞ்சள் சிறு துண்டு 1, நல்லெண்ணெய் 4 அல்லது 5 டீஸ்பூன்கள், உப்பு 2 டீஸ்பூன்கள்.

வெறும் பாணலியில் வெந்தயத்தை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பின் எண்ணெயை விட்டு, பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக்கொண்டு, மஞ்சள் துண்டையும் சற்று பொரித்து எடுத்துக்கொள்ளவும். அதன்பின், 2 டீஸ்பூன்கள் எண்ணெயை விட்டு, கீரையை அலம்பி (வடிய வைத்து)ப் போட்டு, சுருள வதக்கி, எடுத்துக்கொள்ளவும். வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் இவைகளை மசிய இடித்துக்கொண்டு, அதன்பின், வறுத்த மிளகாய் வற்றல், வதக்கிய பச்சைமிளகாய், உப்பு இவற்றைப் போட்டு, மசிய இடித்துக்கொண்டு, வதக்கிய கீரையைப் போட்டு, நன்றாக மசியும் வரை சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது?

Gongura Leaf Chutney

கற்சட்டியை அல்லது பாணலியை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன்கள் எண்ணெயை விட்டு, கடுகைத் தாளித்து, இடித்து எடுத்த சட்னியைப் போட்டுச் சற்று வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த கீரையில் புளிப்பு இருக்குமாதலால், இதற்கு புளி தேவை இல்லை. இதற்கு உப்பு, உரைப்பு இவை சற்று கூடுதலாக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.

(நன்றி: சமைத்துப் பார், வெளியீடு: எஸ். மீனாட்சி அம்மன் பப்ளிகேஷன்ஸ்)

logo
Kalki Online
kalkionline.com