உடல் எடையை குறைக்க உதவும் ஹெல்தி ரெசிபி!

Gothumai Kanji Recipe.
Gothumai Kanji Recipe.

அந்த காலத்துடன் ஒப்பிடும்போது இப்போதெல்லாம் நாம் சாப்பிடும் உணவுமுறையே முற்றிலுமாக மாறிவிட்டது. பெரும்பாலும் துரித உணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நாம் சாப்பிடுவதால், பல்வேறு விதமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக உடல் எடை அதிகரித்தல் என்பது இப்போது பலரிடம் காணப்படும் பிரச்சனையாக உள்ளது. 

எனவே இந்த பதிவில் உடல் எடையை குறைப்பதற்கு ஏதுவாக ஒரு ஹெல்த்தியான கோதுமை கஞ்சி எப்படி செய்வது எனப் பார்க்கலாம். இதை பெரும்பாலும் இரவு நேரத்தில் நீங்கள் உணவாக எடுத்துக் கொண்டால், உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - ¼ கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 3 டம்ளர்

சுக்கு பொடி - 2 சிட்டிகை

ஏலக்காய் பொடி - ½ ஸ்பூன் 

துருவிய தேங்காய் - ¼ கப்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் தனியாக ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து, தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். 

கரைத்த கோதுமை மாவிலேயே சுக்கு, ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை அப்படியே எடுத்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். 

இதையும் படியுங்கள்:
கோதுமை பணியாரம்!
Gothumai Kanji Recipe.

பின்னர் அதில் தேங்காய் துருவலை சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தால், சுவையான உடல் எடையைக் குறைக்க உதவும் கோதுமை கஞ்சி தயார். இரவு நேரத்தில் இதை தினசரி குடித்து வந்தால், வேகமாக உடல் எடை குறையும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com