கீரைகளை அவசியம் சமையலில் சேர்க்க வேண்டும். ஏன் தெரியுமா?

கீரை வகைகள்.
கீரை வகைகள்.

கீரைகளில் எண்ணற்ற சத்து அடங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரையில் ஆரஞ்சில் இருப்பதைவிட ஏழு மடங்கு வைட்டமின் சி உள்ளது. கேரட்டில் இருப்பதை விட நாலு மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலில் இருப்பதை விட நாலு மடங்கு கால்சியம், ரெண்டு மடங்கு  புரோட்டீன் உள்ளது.

வாழைப்பழத்தில் இருப்பதைவிட மூணு மடங்கு பொட்டாசியம் உள்ளது. பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு இரும்பு சத்து உள்ளது. இவ்வளவு பயனுள்ள முருங்கைக் கீரையை வீட்டில் சிறிது அளவு இடம் இருந்தாலும் ஒரு கிளையை வெட்டி வைத்தால் வறட்சியையும் தாங்கி வளரும். தினசரி கீரை கசாயம், கீரை தேநீர், கீரை பொடி, கீரை சுண்டல், பருப்புக் கீரை, கீரை சூப் என்று விதவிதமாக செய்து உடல் நிலையை தேற்றலாம். முருங்கை மரம் வளர்ப்பதற்கு அதிகம் சிரமப்பட வேண்டியது இல்லை. அதில் கம்பளி பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். காய், பூ, கீரை என்று அனைத்தையும் ஃபிரஷ்ஷாக பறித்து பயன்படுத்தலாம். 

முருங்கைக் கீரையை சுண்டும் பொழுது வேர்க் கடலையை இரண்டு ஒன்றாக பொடித்துப் போட்டு சுண்டி இறக்கினால் சுவை அள்ளும். 

 தவசு முருங்கை:

மூக்கு நீர் பாய்தல் இரைப்பு, இருமல் நீக்கும், கோழை அகற்றும் குணமுடையது. இதை சுண்டும் பொழுது நன்றாக வேகவிட்டு சீரகப்பொடி அதிகம் போட்டு செய்ய வேண்டும். 

 சிவப்பு பொன்னாங்கண்ணி:

பூண்டு சேர்த்து வதக்கி உணவுடன் உண்டால் மூலநோய், வாய்ப்புண், தொண்டை புண் நீங்கும்.

பச்சை பொன்னாங்கண்ணி:

மேனி பிரகாசிக்கும். இதில் தினசரி சூப் வைத்து அருந்தினால் உடல் வலிமை பெறும். தோட்டத்தில் சில தண்டுகளை நட்டு வைத்தால் தோட்டம் முழுவதும் பரவி வளரும். வெட்ட வெட்ட துளிர்க்கும். 

 அரைக்கீரை:

தொட்டியில் மண், எரு, தேங்காய் நார் துகள் கலந்து விதை போட்டால் அழகாக வளரும். தாது விருத்தி செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும். வதக்கி இறக்கும் பொழுது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால் ருசி கூடும். 

அகத்திக்கீரை
அகத்திக்கீரை

அகத்திக்கீரை:

செய்யும் பொழுது சின்ன வெங்காயம், தேங்காய், சிறு பருப்பு சேர்த்து  செய்தால் குளிர்ச்சி கிட்டும். பார்வை தெளிவும், எலும்புக்கு பலமும் கொடுக்கும். 

 லஜ்சை கெட்ட கீரை:

முருங்கைக்கீரையுடன் சேர்த்து வதக்கலாம். வாயு தொந்தரவை குறைத்து, மூட்டு வலி, மூட்டு வீக்கத்தை நீக்கும். 

 ஆரைக்கீரை:

பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட ருசிக்கும். அளவுக்கு மீறி போகும் சிறுநீரை கட்டுப்படுத்தும். 

வெந்தயக்கீரை
வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை:

வீட்டில் தொட்டியில் வளர்க்கலாம். நிலத்திலும் வளர்க்கலாம். அது எந்த இடத்தில் வளர்ந்தாலும் அந்த நிலத்தில் உள்ள நைட்ரஜன் சத்தை இது பாதுகாக்கிறது. அதோடு கூடி அச்சத்தின் தரத்தையும் கூட்டுகிறது. வேறு ஒரு சிறந்த ரசாயன பொருளாக நைட்ரஜனை மாற்றி மற்ற செடிகளுக்கு வழங்குகிறது. சிறுநீரக கோளாறுகளுக்கு சிறப்பு பெற்ற கீரை. நீரிழிவை கட்டுப்படுத்துவதிலும் தனிச்சிறப்பு பெற்றது. பொடியாக அறிந்து எண்ணெயில் வதக்கி சப்பாத்தியில் போட்டு மேத்தி பரோட்டாவாக ருசிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
இந்த உயிரினங்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
கீரை வகைகள்.

கொத்தமல்லி கீரை:

மூச்சு அடைப்பு திணறல் ஆகிய நோய்களுக்கு கொத்துமல்லி விதை சிறந்தது. இக்கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் பித்தத்தை இது அறவே நீக்கி தாது பலத்தை உண்டாக்கும். வீட்டு தொட்டியில் கொத்தமல்லியை உடைத்து போட்டு வளர்க்கலாம். கொத்தமல்லி கீரையை எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தி பயன்பெறலாம். 

 கறிவேப்பிலை: 

குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். கண்பார்வை தெளிவடையும். ரத்தத்தை சுத்தப்படுத்தும் .கை கால் நடுக்கத்தை போக்கு.ம் வீக்கம் கட்டிகள் போன்றவற்றை குணப்படுத்தும். நகங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். வீட்டுத் தொட்டியில் வளர்க்கலாம். அன்றன்றும் பிரஷ்ஷாக பறித்து பயன்படுத்தி பயன் பெறலாம். 

 புதினா:

இரும்புச்சத்து இருப்பதால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு புதிய ரத்தத்தையும் உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும். எலும்புகளை வளர செய்யும். புதினா போட்டு கசாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். அரை சங்கு புதினா கீரைசாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும். தண்டை நட்டாலே போதும் செழித்து வளரும். 

இப்படி வளர்த்து, பண்படுத்தி, ரசி ருசியாய் சமைத்து உண்டு,  உணவு சமையலில் கீரையின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரிய வைத்து உணர்த்துவோமாக! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com