Guacamole recipe
Guacamole recipe

Guacamole: அவகாடோ வச்சி இப்படி ஒரு ரெசிபியா? செமையா இருக்கே! 

Guacamole என்பது அவகாடோ பயன்படுத்தி செய்யப்படும் ஒரு க்ரீமியான டிப் வகை ரெசிபி ஆகும். இது ஒரு மெக்ஸிகன் வகை உணவாக இருந்தாலும், இந்திய மசாலாக்களை சேர்த்து எப்படி சூப்பர் சுவையில் Guacamole செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு தனித்துவமான சுவையில் ஏதேனும் உணவு சாப்பிட வேண்டும் என விரும்பினால், கட்டாயம் இந்த உணவை முயற்சித்துப் பாருங்கள். 

தேவையான பொருட்கள்

அவகாடோ - 2 

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லித் தழை - சிறிதளவு 

புதினா - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

சீரகத்தூள் - ½ ஸ்பூன் 

சாட் மசாலா - ½ ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் வெண்ணெய் பழம் என சொல்லப்படும் அவகாடோவை பாதியாக வெட்டி, அதன் சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கரண்டியை வைத்து பழத்தை க்ரீமி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

அடுத்ததாக பிசைந்த வெண்ணெய் பழத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து கலக்குங்கள். இது Guacamole-க்கு சிறப்பான சுவையைக் கொடுக்கும். இதே போல சீரகப்பொடி, சாட் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் நன்றாகப் பிசையை வேண்டும். 

இதையும் படியுங்கள்:
Purine சத்து அதிகம் நிறைந்த 5 உணவுகள்! 
Guacamole recipe

பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி தட்டையாக்கி மடியுங்கள். இது சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, அவகாடோ ஆக்சிஜனோடு வினைபுரிந்து பழுப்பு நிறமாக மாறுவதைத் தடுக்கிறது. இப்போது கொஞ்சமாக எடுத்து சுவைத்துப் பாருங்கள். உப்பு, மசாலா ஏதேனும் குறைவாக இருப்பது போல் தெரிந்தால் அவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். 

இறுதியில் Guacamole-ஐ பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி, நறுக்கிய கொத்தமல்லித் தழைகளை மேலே தூவி அலங்கரிக்கவும். இதை சிப்ஸ், பிரட் அல்லது உங்களுக்குப் பிடித்த இந்திய உணவுகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பயன்படுத்தலாம். சுவையும் நீங்கள் நினைப்பதை விட வேற லெவலில் இருக்கும். ஒருமுறை கட்டாயம் முயற்சித்துப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com