Purine சத்து அதிகம் நிறைந்த 5 உணவுகள்! 

Purine rich foods.
Purine rich foods.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நாம் கடைபிடிக்கும்போது அதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களை சேர்ப்பது அவசியம். அதிலும் குறிப்பாக பல்வேறு உணவுகளில் காணப்படும் ப்யூரின்கள் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கின்றன. இது என்னதான் உடலுக்கு அவசியமானது என்றாலும், இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். இருப்பினும் ப்யூரின் நிறைந்த உணவுகளை மிதமாக சேர்ப்பது மூலமாக, எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் அதன் நன்மைகளை நாம் அனுபவிக்க முடியும்.  

1. பருப்பு வகைகள்: பருப்புகள் இந்திய உணவு வகைகளில் முதன்மையானது மற்றும் ப்யூரின்களின் சிறந்த ஆதாரமாக உள்ளது. புரதம் அதிகம் நிறைந்த உளுத்தம் பருப்பு, சென்னா, துவரம் பருப்பு, ராஜ்மா போன்றவற்றில் ப்யூரின்கள் உள்ளது. இது மட்டுமின்றி இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது நார்ச்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் போன்றவையும் கிடைப்பதால், பருப்பு வகைகள் எப்போதுமே ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். 

2. கடல் உணவுகள்: இந்தியாவின் பரந்த கடற்கரையானது ப்யூரின்கள் நிறைந்த ஏராளமான கடல் உணவுகளை நமக்குத் தருகிறது. கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி போன்ற மீன்கள் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களால் நிரம்பியுள்ளது. இருப்பினும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை மிதமாகவே எடுத்துக் கொள்வது நல்லது. 

3. உறுப்பு இறைச்சிகள்: நீங்கள் மாமிசம் உண்பவராக இருந்தால், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்பு இறைச்சிகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த இறைச்சிகளில் விட்டமின் ஏ, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இருப்பினும் இவற்றில் கொலஸ்ட்ரால் இருப்பதால் இதய பாதிப்பு உள்ளவர்கள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

4. கீரைகள்: பொதுவாகவே எல்லா விதமான கீரை வகைகளிலும் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். அப்படிதான் பாலக், அமரந்த், வெந்தயம் போன்ற குறிப்பிட்ட சில கீரை வகைகளில் ப்யூரின்கள் நிறைந்துள்ளது. இவற்றை சராசரியாக எடுத்துக் கொள்வது மூலமாகவும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ப்யூரின்கள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பிறர் மனம் கவரும்படி பேசுவது எப்படி?
Purine rich foods.

5. காளான்: இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பல்துறை மூலப்பொருளாக காளானைச் சொல்லலாம். பார்ப்பதற்கு இறைச்சி போலவே இருக்கும் இதன் அமைப்பு, முற்றிலும் தனித்துவமான சுவையை அளிக்கிறது. மேலும் இவை ப்யூரின்களின் நல்ல ஆதாரமாகவும் உள்ளன. வெஜிடேரியன் விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு காளான்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் கலோரியும் குறைவாக உள்ளது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளும் உள்ளதால், பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. 

மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ப்யூரின் அளவு நிறைந்து காணப்படுகிறது. இவற்றை நீங்கள் சாப்பிட முடிவெடுப்பதற்கு முன்பாக தகுந்த மருத்துவர்களிடம் ஆலோசிப்பது நல்லது. ஏனெனில் அதிகமான ப்யூரின் நுகர்வு உங்கள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com