
தினமும் இல்லத்தரசிகள், இல்லத்தரசர்களுக்கு இருக்கும் பெரும் கவலை என்ன சமைப்பது என்று தான். தினசரி தோசை, இட்லி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, அப்போ அப்போ புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி, மிளகாய் சட்னி என சலித்து போகும் அளவிற்கு இதையே சாப்பிட்டுப்பார்கள். வேறு என்ன செய்வது என்றுதான் பலருக்கும் இங்கு கவலையே சாப்பிடும் நேரம் வந்துவிட்டால் போதும் என்ன சமைப்பது என்ற யோசனையேஎ தலை முடியை பிய்க்க செய்யும்.
இவர்களுக்காகவே வித்தியாசமாக கொய்யா சட்னி செய்வது எப்படி என பார்க்கலாம். கொய்யாக்காய் பொதுவாகவே அதிக சத்துடைய பழமாகும். இது ஜீரணசக்திக்கு ரொம்ப நல்லதாகும். பலரும் இந்த கொய்யாக்காயை உப்பு தொண்டு சாப்பிட விரும்புவர். இது ஒரு பழம் தானே இதில் எப்படி சட்னி செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள். வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
250 கிராம் கொய்யா- பொடியாக நறுக்கியது
1/2 தேக்கரண்டி உப்பு
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - நறுக்கியது
1 டீஸ்பூன் இஞ்சி- நறுக்கியது
2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்- நறுக்கியது
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் கொய்யா , மல்லி இலைகள், சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை பாத்திரத்தில் மாற்றி , கடுகு , உளுத்தம்பருப்பு , கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி, தோசை இட்லியுடன் வைத்து சாப்பிட்டு பாருங்க. மற்ற சட்னியை எல்லாம் மறந்து விடுவீர்கள். அந்த அளவிற்கு சுவையானதாக இருக்கும்.