குஜராத் ஸ்பெஷல் ஹண்டவோ!

குஜராத் ஸ்பெஷல் ஹண்டவோ!

தேவையானபொருட்கள் :

 • அரிசி 1 கப்

 • துவரம் பருப்பு 1 கப் கடலைப்பருப்பு,பயற்றம் பருப்பு ,உளுந்தம் பருப்பு எல்லாம் சேர்த்து ஒரு கப்.

 • உப்பு தேவையான அளவு.

 • சக்கரை ஒரு ஸ்பூன்.

 • சற்றே புளித்த தயிர் ஒரு கப்

 • மிளகாய் தூள் காரத்திற்கேற்ப.

 • சோடா சால்ட் அல்லது ஈ னோ (லெமன்) சால்ட் 1/2 ஸ்பூன்.

 • துருவிய கேரட்,முட்டைகோஸ் , பச்சை பட்டாணி தேவைக்கேற்ப.

 • கொத்துமல்லி தழை சிறிது.

  தாளிக்க.

 • எண்ணெய்,கடுகு .ஜீரகம்.வெள்ளை எள்ளு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது.

செய்முறை.

அரிசி பருப்புகளை நன்கு கழுவி 4மணிநேரம் ஊறவைக்கவும்.

பிறகு தயிர் உப்பு சேர்த்து அடை மாவு போல அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து வைத்து..மேலாக ஒரு ஸ்பூன் சர்க்கரை தூவி விடவும்.கலக்க வேண்டாம்.இந்த மாவை ஓரளவிற்கு புளிக்க விடவும்.

எப்போது செய்யப்போகிறோமோ அப்போது,மாவில் சிறிது எடுத்துக் கொண்டு,காரப்பொடி,துருவிய காய் கறிகள் கொத்துமல்லி தழையை கலந்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய முருங்கை இலை,பாலக் போன்றவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தவாவை சுட வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.

மாவு சரியாக புளிக்கவில்லை எனில்,சோடா சால்ட் அல்லது ஈனோ எண்ணெய்யுடன் சேர்த்து மாவில் கலந்து விடவும்.அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு கலந்து வைத்துள்ள மாவை மொத்தமாக தவாவில் தாளிப்பின் மீது கொட்டி, மேலே ஒரு மூடி போட்டு மூடவும்.

அடிப்பாகம் வெந்ததும் தோசை திருப்பி கொண்டு,மெதுவாக திருப்பி விட்டு மேல்புறமும் மொறு மொறு என்றாகும் அளவிற்கு பேக் (bake) செய்யவும்.

துண்டுகளாக கட் செய்து டொமேடோ சாஸ் கிரீன் சட்னி உடன் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com