தேவையான பொருட்கள்:
அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு 1/3 கப்.
அவல் ஒரு பிடி
ஜவ்வரிசி ஒரு பிடி.
சற்று புளித்த தயிர் சிறிது
தேவையான உப்பு.
சர்க்கரை ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன்.
தாளிக்க எண்ணெய் கடுகு,
பெருங்காயத்தூள்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது.
அலங்கரிக்க:
கொத்தமல்லி தழை மற்றும் விருப்பம் இருந்தால் தேங்காய் துருவல்.
க்ரீன் சட்னி:
கொத்தமல்லி தழை,
பச்சை மிளகாய்,
பொட்டுக்கடலை,
உப்பு,
1/2 ஸ்பூன் சர்க்கரை,
லெமன் சாறு 1/4 மூடி.
புதினாவும் சேர்க்கலாம்.
சர்க்கரை சேர்த்தால் நிறம் மாறாது.
செய்முறை:
அரிசி பருப்பு,ஜவ்வரிசி,அவல் எல்லாவற்றையும் நன்கு கழுவி ஒன்றாக 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் தயிர் ,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
நமது இட்லி செய்வது போலவே இரவு முழுவதும் புளிக்க விட வேண்டும்.
மாவின் மீது,சர்க்கரை மற்றும் வெந்தயத்தை தூவி,எடுத்து வைக்கவும்.கலக்க வேண்டாம்.
மறுநாள் இட்லி பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்..அது சூடாகிக் கொண்டிருக்கும் போதே,விளிம்பு உள்ள தட்டுகளில் எண்ணெய் தடவி..stand போட்டு உள்ளே வைக்கவும்.(கடைகளில் டோக்ளா plate என்று கிடைக்கிறது).
மாவு சரியாக புளிக்க வில்லை எனில் soda salt அல்லது ஈனோ (லெமன்) சால்ட் கலந்து, தயாராக வைத்திருக்கும் தட்டுகளில் 4 அல்லது 5 கரண்டி மாவு விட்டு இட்லி போல வேகவிடவும்.
இது போன்று இரண்டு தட்டுகள் இட்லி செய்து கொண்ட பின், ஒரு தட்டு இட்லி மீது கிரீன் சட்னி தடவி அதன் மீது இன்னொரு தட்டு இட்லி யை வைத்து துண்டுகள் போடவும்.
இட்லி துண்டுகளை கவனமாக எடுத்து serving tray இல் அடுக்கவும்.
தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து இட்லி துண்டுகள் மீது கொட்டி மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.