குஜராத்தி ஸ்பெஷல் கோர் கெரி ரெசிபி!

கோர் கெரி ரெசிபி...
கோர் கெரி ரெசிபி...
Published on

கோர் கெரி ரெசிபி என்பது பாரம்பரிய குஜராத்தி இனிப்பு கார மாங்காய் ஊறுகாய். சில மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் இந்த இனிப்பு மாங்காய் தேப்லாஸ், காக்ராஸ், பக்ரிஸ் மற்றும் ரொட்டியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்டு வெயிலில் 10 நாட்கள் காய வைத்து தயாரிக்கப்படுகிறது.

இனிப்பு கார மாங்காய்:

பச்சை மாங்காய் ஒரு கிலோ

உப்பு  தேவையானது

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

வெல்லம் 1/2 கப்

சர்க்கரை  1/2 கப்

ஊறுகாய்க்கு தேவையான மசாலா பொருட்கள்:

தனியாப் பொடி 4 ஸ்பூன்

கடுகுப் பொடி 2 ஸ்பூன்

வெந்தயப் பொடி 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் 4 ஸ்பூன் பெருங்காயத்தூள் 1 ஸ்பூன் நல்லெண்ணெய்்1/2 கப்

மாங்காயை தோல் நீக்கி சின்ன துண்டங்களாக நறுக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து நாள் முழுவதும் அப்படியே வைத்து விடவும். 

அடுத்த நாள் பார்த்தால் சிறிது நீர் விட்டுக் கொண்டு இருக்கும். அதில் பொடித்த வெல்லம் அரை கப், சர்க்கரை அரை கப் இரண்டையும் சேர்த்து நன்கு மரக் கரண்டியால் கிளறவும். சர்க்கரையும் வெல்லமும் மாங்காயில் நன்கு கரைந்ததும் அதனை ஒரு காட்டன் துணி கொண்டு வாயை இறுக கட்டி வெயிலில் ஒரு வாரம்,10 நாட்கள் வைத்தெடுக்கவும்.

தினமும் காலையும், மாலையும் ஒரு முறை கிளறி வெயிலில் வைக்கவும். சர்க்கரையும் வெல்லமும் கரைந்து கெட்டி பாகாகி வரும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையாக கூந்தல் பராமரிப்பு மற்றும் கலரிங் செய்முறைகள்!
கோர் கெரி ரெசிபி...

வாணலியில் அரை கப் நல்லெண்ணெய் விட்டு மசாலா பொருட்கள் தனியா பொடி, மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, கடுகு பொடி, பெருங்காயம் அனைத்தையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி ஊறிய மாங்காயில் போட்டு கலந்து விடவும். இதனை இரண்டு மூன்று நாட்கள் அப்படியே வைத்துவிட மசாலா பொருட்களின் சுவை மாங்காயில் இறங்கி அற்புதமாக இருக்கும் இதனை சப்பாத்தி, பூரி தேப்லா,காக்ரா,பக்ரி என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரு வருடம் ஆனாலும் கெடாது.

குறிப்பு: மாங்காய் நன்கு புளிப்பான சுவையுடன் கூடிய பச்சை மாங்காயாக இருக்க வேண்டும்.

ஈரம் படாத கரண்டி உபயோகிக்க வேண்டும். அப்பொழுது தான் ஒரு வருடம் ஆனாலும் கெடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com