

குல்லா ஃபொடி (Gulla Phodi) கத்திரிக்காய் ரெசிபி.
தேவையான பொருட்கள்:
1.உடுப்பி பிரிஞ்சால் 200 கிராம்
2.கருப்பு எள் ½ டீஸ்பூன்
3.சிவப்பு மிளகாய் தூள் ½ டீஸ்பூன்
4.பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்
5.உப்பு ⅓ டீஸ்பூன்
6.சோள மாவு (corn flour) 1 டேபிள் ஸ்பூன்
7.அரிசி மாவு தேவையான அளவு
8.தேங்காய் எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
கத்திரிக்காயை ⅓" அளவில் வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். துண்டுகளை தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு கத்திரிக்காய் துண்டுகளில் உள்ள ஈரப் பசையை தூய காட்டன் துணியால் ஒற்றி எடுக்கவும். எள், மிளகாய் தூள், பெருங்காய தூள், உப்பு, சோள மாவு ஆகியவற்றை ஒன்றாய் கலந்து தண்ணீர் ஊற்றி திக்கான பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும். பேஸ்ட்டை கத்திரிக்காய் துண்டுகள் மீது தடவி 15 நிமிடம் மரினேட் பண்ணவும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், மரினேட் செய்த கத்திரிக்காய் துண்டுகளை அரிசி மாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் போடவும். மீடியம் தீயில், கத்திரிக்காய் துண்டுகள் பொன்னிறமாக கிரிஸ்பியாக பொரிந்து வந்ததும் எடுத்து விடவும். சூடான, சுவையான கத்திரிக்காய் குல்லா ஃபொடி தயார்.
எடமாமே சாட் (Edamame Chaat) ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.வேக வைத்த எடமாமே (சோயா அவரை) 1 கப்
2.நறுக்கி வேக வைத்த ஸ்வீட் பொட்டட்டோ ½ கப்
3.நறுக்கிய வெங்காயம் ¼ கப்
4.நறுக்கிய தக்காளி ¼ கப்
5. நறுக்கிய வெள்ளரிக்காய் ¼ கப்
6.மாதுளை முத்துக்கள் ¼ கப்
7.வறுத்த வேர்க்கடலைப் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
8.புதினா கொத்தமல்லி சட்னி 2 டீஸ்பூன்
9.இனிப்பு புளி சட்னி 2 டீஸ்பூன்
10.சாட் மசாலா 1 டீஸ்பூன்
11.வறுத்த சீரகத் தூள் ½ டீஸ்பூன்
12.உப்பு, மிளகுத் தூள் தேவையான அளவு
13.லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
14.ஓமப் பொடி 2 டேபிள் ஸ்பூன்
15.நறுக்கிய கொத்தமல்லி இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் மேலே கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் (கொத்தமல்லி இலைகள் தவிர) போட்டு நன்கு கலக்கவும். மேற்பரப்பில் கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். உடனடியாகப் பரிமாறி உட்கொள்ளவும். சத்துக்கள் நிறைந்த சுவையான எடமாமே சாட்.