Four delicious lentil recipes!
gulob jamun recipes

உவகை தரும் நான்கு வகை உளுந்து ரெசிபிகள்!

Published on

உளுந்து குலோப் ஜாமுன் 

தேவை:

உளுந்தம் பருப்பு -1 கப் பச்சரிசி - 2 கப் 

நெய் - தேவைக்கு 

சர்க்கரை - 2 கப் 

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன் 

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை: 

அரிசி, உளுந்தம் பருப்பை ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, பந்துபோல வரும் வரை, தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். சக்கரையை நீர்விட்டு ஜீரா தயார் செய்யவும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து, அரைத்த மாவை ஜாமூன்களாக உருட்டி, நெய்யில் பொறித்து எடுத்து, ஜீராவில் ஊறப்போடவும். செய்வதற்கு சுலபமான, சுவையான ஜாமுன் தயார்.

உளுந்து போண்டா 

தேவை:

உளுந்தம் பருப்பு - 1 கப் பச்சரிசி - 1 கப் 

மிளகு - 1 ஸ்பூன் 

தேங்காய் துருவல் - அரை கப் 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை: 

பச்சரிசி, உளுந்தம் பருப்பை களைந்து ஊறப்போடவும். நன்கு ஊறியதும், நீரை வடித்து விட்டு, உப்பு கலந்து கெட்டியாக அரைக்கவும். வடை மாவை விட இளகலாக இருக்க வேண்டும். மாவில் தேங்காய் துருவல், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிபோட்டு, பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு உளுந்து போண்டா தயார்.

இதையும் படியுங்கள்:
ஹெல்தியான Ragi mudde மற்றும் மக்கானா சப்பாத்தி ரெசிபி!
Four delicious lentil recipes!

உளுந்தம் பருப்பு அல்வா 

தேவை:

உளுத்தம் பருப்பு ஒரு கப் 

பசு நெய் அரை கப் 

பால்கோவா - நா கப்லு ஸ்பூன் 

சர்க்கரை ஒரு கப் 

பன்னீரில் கரைத்த குங்குமப்பூ சிறிது 

முந்திரி,பாதாம் பருப்புகள் தலா ஆறு.

செய்முறை: 

உளுத்தம் பருப்பை 8 மணிநேரம் நீரில் ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் நெய்விட்டு, உளுந்தமாவு விழுதை போட்டு கிளறவும். மாவு லேசாக சிவந்ததும், பால்கோவாவையும் சர்க்கரையையும் போட்டு கிளறவும். ஹல்வா பதம் வரும்போது நெயில் வருத்த முந்திரி, பாதாம், பருப்புகளை சேர்க்கவும். பன்னீரில் கரைத்த குங்குமப்பூவையும் கலந்து சற்று நேரம் மூடி வைத்து, பிறகு தாம்பாளத்தில் கொட்டி பரப்பி வில்லைளாக போடவும். சுவையான, சத்தான உளுந்தம் பருப்பு அல்வா ரெடி.

உளுந்து பச்சடி 

தேவை:

உளுத்தம் பருப்பு - 5 ஸ்பூன் 

தயிர்  - 1 கப் 

நெய் - 1 ஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்ப 

மல்லித்தழை பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்

இஞ்சி துருவல் - அரை ஸ்பூன் 

தாளிக்க - கடுகு, பச்சை மிளகாய் ஒன்று

செய்முறை:

உளுந்தம் பருப்பை வாணலியில் சிவக்க வறுத்து பொடிக்கவும். நெய்யில் கடுகு தாளித்து, பச்சை மிளகாயை வதக்கி தயிரில் சேர்க்கவும். இதனுடன் இஞ்சி துருவல், மல்லித்தழை, உப்பு சேர்க்கவும். இந்தப் பச்சடி, சாம்பார் சாதம், புளியோதரைக்கு தொட்டுக்கொள்ள மிகப்பொருத்தமாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com