Gutti Vankaya Kura Recipe: சூப்பரான ஒரு ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் குழம்பு! 

gutti vankaya kura recipe
gutti vankaya kura recipe

குட்டி வங்கயா குரா என்பது கத்திரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு சுவையான உணவாகும். இது கத்திரிக்காயில் சுவையான மசாலா பொருட்கள் நிரப்பப்பட்டு முற்றிலும் வித்தியாசமான முறையில் செய்யப்படும் ஒரு ஆந்திரா உணவு. இந்த உணவு அதன் நறுமண மசாலா பொருட்கள், புளி, வேர்க்கடலை மற்றும் எள் போன்றவற்றின் சுவையால் மிகவும் பிரபலமானது. சரி வாருங்கள் இந்த பதிவில் ஆந்திரா ஸ்பெஷல் குட்டி வங்கயா குரா எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

(பூரணம் செய்வதற்கு)

6 கத்தரிக்காய்

2 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை

2 ஸ்பூன் எள்

2 ஸ்பூன் துருவிய தேங்காய்

1 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்

1 ஸ்பூன் சீரகம்

1 ஸ்பூன் மிளகாய் தூள்

1 ஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையான அளவு உப்பு

(குழம்பிற்கு)

2 ஸ்பூன் எண்ணெய்

1 ஸ்பூன் கடுகு

1 ஸ்பூன் சீரகம் 

1 வெங்காயம் 

2 தக்காளி 

1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 

1 ஸ்பூன் புளி கரைசல் 

ஒரு கைப்பிடி கொத்தமல்லித் தழை 

உப்பு தேவையான அளவு 

தண்ணீர் தேவையான அளவு

செய்முறை: 

முதலில் கத்திரிக்காயின் உள்ளே வைக்கும் பூரணம் தயாரிக்கலாம். அதற்கு ஒரு கடாயில் வேர்க்கடலை, தேங்காய், கொத்தமல்லி விதைகள் மற்றும் சீரகத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் இந்த கலவையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். 

அடுத்ததாக கத்திரிக்காய்களைக் கழுவி நீள்வாக்கக பிளந்து கொள்ளுங்கள். கத்திரிக்காயை முழுவதுமாக வெட்டக்கூடாது, தண்டு அப்படியே இருக்க வேண்டும். அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கத்திரிக்காயின் உள்ளே வைத்து சிறிது நேரம் அப்படியே விடவும். 

அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாலிக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வேக விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
Intermittent fasting இருப்பதால் மாரடைப்பு ஏற்படுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
gutti vankaya kura recipe

பின்னர் கத்திரிக்காயை மெதுவாக எடுத்து அதில் போட்டு மீதமுள்ள மசாலா கலவையை மேலே தெளிக்கவும். இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கத்தரிக்காய் வெங்காயம் தக்காளி கலவையுடன் ஒன்றும் படி கிளறி விடுங்கள். கிளறும்போது கத்தரிக்காய் உடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

இப்போது புளி கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி போட்டு சுமார் 25 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் வேகவிடுங்கள். கத்திரிக்காய் வேகும் வரை அவ்வப்போது குழம்பைக் கிளறி விடுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

இறுதியில், கத்தரிக்காய் வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லித் தழைகளை மேலே தூவி இறக்கினால், சுவையான குட்டி வங்கயா குரா தயார். இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் சுவையில் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com