
கார்ன்ஃபிளேக்ஸ் திடீர் அல்வா (Halwa, Murukku recipes!)
தேவை:
கார்ன்ஃபிளேக்ஸ் - 2 கப்
பசும்பால் - 2 கப்
முந்திரி - 10
நெய் - அரை கப்
மில்க் மெட்டு - அரை கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
2 கப் கார்ன் ஃப்ளேக்ஸை மிக்ஸியில் நைஸாக தூள் செய்து வைக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து வைக்கவும். கடாயில் 2 கப் பால் ஊற்றி தூளாக்கிய கார்ன் ஃப்ளேக்ஸை போடவும். அடிப்பிடிக்காமல் கிளறி தேவையான அளவு மில்க் மெய்டு சேர்த்து அல்வா பதம் வந்ததும் சிறிது நெய் ஊற்றிக் கிளறி இறக்கி நெய் தடவிய தட்டுக்கு மாற்றி அதன் மேல் வறுத்த முந்திரியை தூவி பரிமாறவும். அல்டிமேட் சுவையில் திடீர் அல்வா ரெடி.
கோதுமை முறுக்கு
தேவை:
கோதுமை மாவு - கால் கிலோ
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் - 3 சிட்டிகை
எள் - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
கோதுமை மாவை குக்கரில் வைத்து, ஆவியில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். குக்கரில் வெயிட் போடாமல் வேகவைக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வெந்த கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்த்துக்கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவைப் பிசைந்துகொள்ள வேண்டும்.
அதன் பிறகு மாவை முறுக்கு அச்சில் போட்டு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கிப் பிழியவும். பின்பு மாவு இரு புறமும் வெந்தவுடன், முறுக்கை எடுக்கவும். இந்த முறுக்கு வேக சற்று நேரம் எடுக்கும். மிதமான தீயில் வைத்துப் வேகவைக்கவும். மொறு மொறு கோதுமை முறுக்கு தயார்.