
உணவு மற்றும் வாழ்க்கை பழக்கவழக்கங்களில் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும். தினசரி மூன்று நேர சாப்பாட்டிலும் இரண்டு நேரமாவது சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இந்த சாப்பாட்டு விஷயத்தில் காம்ப்ரமைஸ் கூடாது. சரியான சாப்பிட்டு நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் தூக்கமின்மை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். (healthy foods in lifestyle) அதேபோல் இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
பழங்கள், சாலட்டுக்களைத் தவிர இதர உணவுகளை வேகவைத்து சாப்பிடுங்கள். அதன் மூலம் அதில் இருக்கும் தொற்றுக் கிருமிகள் அழிந்து போகும். உணவும் வெந்து போவதால் மெல்லவும், ஜீரணிக்கவும் எளிதாக இருக்கும். கடைகளில் சமைத்து வைத்திருக்கும் உணவுகளையும், குளிர்பானங்கள் சாப்பிட்டுவதையும் தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக பிரஸ் ஜூஸ் பருகுங்கள்.
தட்ப வெப்பநிலை மாற்றமும் உடலைப் பாதிக்கும். அதனால் காலச் சூழலுக்கு ஏற்ற உணவை உண்ண வேண்டும். குளிர் மற்றும் மழைக் காலங்களில் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதனால் உடலுக்கு சூடு கிடைக்கும். கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் அதிக வியர்வை மூலம் ஏற்படும் சோர்வை சரி செய்யலாம்.
எப்போதும் ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்காக அதிகமாக சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது சாப்பாட்டில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டிவி பார்த்து கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, மற்றவர்களுடன் பேசிக் கொண்டோ சாப்பிடும் பழக்கத்தை விட்டு விடுங்கள். இல்லாவிட்டால் அதிகமாக சாப்பிடும் சூழல் ஏற்படும் அதனால் உடல் எடை அதிகரிக்கும், ஜீரண கோளாறுகள் ஏற்படும்.
சோடியம் அதிகமாக இருக்கும் உப்பை உணவில் நிறைய சேர்த்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அத்தகைய உடல் நல குறைபாடுகள் கொண்டவர்கள் உப்பின் உபயோகத்தை குறைக்க வேண்டும். மேஜையில் உப்பை வைத்து பரிமாறும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதனால் உப்பின் பயன்பாடு அதிகரிக்கும்.
இனிப்பு பலகாரங்கள் மற்றும் சர்க்கரையை அளவாக பயன்படுத்த வேண்டும். ஆவலில் இவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது. சராசரி ஆண்களுக்கு நாளொன்றுக்கு 36 கிராமமும், பெண்கள் 25 கிராம் (6 ஸ்பூன்) சர்க்கரையும் போதுமானது என்கிறார்கள் அமெரிக்க இதய நல அசோசியேஷன் மருத்துவ ஆய்வாளர்கள். உலகில் மனிதர்களுக்கு வரும் 80 சதவீத கேன்சர்களுக்கு காரணம் அளவுக்கு மீறிய இனிப்புதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறிப்பாக தவிடு நீக்காத தானியங்கள், கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கும். நார்ச்சத்துக்கள் உணவுக்குழாயில் நன்மை செய்யக்கூடிய நுண்கிருமிகளின் உதவியால் உணவை செரிப்பதற்கு உதவுகிறது. நார்ச்சத்துக்கள் நீருடன் சேர்ந்து மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும். நார்ச்சத்து குறைந்த உணவுகளை சாப்பிடும்போது மலக்குடல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றும். அதனால் மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தை உருவாக்கும்.
அசைவ உணவுகள் அவசியம்தான். ஆனால், அதை அளவாக பயன்படுத்த வேண்டும். அதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதேபோல எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவைகளை உணவில் சேர்த்து சமைப்பதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். எண்ணெய்யில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள்.
உடல் எடையை அவ்வப்போது பார்த்து உங்கள் வயது, உயரம் போன்றவைகளுக்கு ஏற்ப உங்கள் உடல் எடை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சராசரி உடல் எடையைவிட, பருமனாக இருப்பவர்களுக்கு பல்வேறு வகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மற்றவர்களைவிட 20 சதவீதம் அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தொடர்ந்து சாப்பிடாமல், சத்து நிறைந்த எல்லா உணவுகளையும் உண்ணுங்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களையே வாங்கி ப்ரஷ்ஷாக சமையுங்கள், பிரஸாக சாப்பிடுங்கள்.