
அல்வா (Halwa) என்ற பெயர் அரேபிய மொழியில் இருந்து வந்தது. இதற்கு இனிப்பு என்று பொருள்.
அல்வா13ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி இட்லி என்று செல்லமாக அழைக்கப்படும் சோஹன் அல்வா சலன்மால் என்பவரால் 18ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அல்பேனியா நாட்டில் சாக்லேட் அல்வா ஃபேமஸ். துருக்கியில் வாழும் இஸ்லாமியருக்கு ஒரு பழக்கம் உள்ளது. அங்கு யாராவது இறந்துவிட்டால் 7வது மற்றும் 40 ம் நாளில் அனைவருக்கும் ஒரு வகை அல்வா செய்து தருவார்கள். இதற்கு இறந்தவர்களின் அல்வா என்றே பெயர்.
துருக்கியர்கள் அல்வா செய்து அதை கம்பி பாகு போல் இழுத்து பிறகு உருண்டையாக உருட்டி பஃர்பிபோல செய்வார்கள்.16ம் நூற்றாண்டில் இது இந்தியாவிற்கு வந்தது.
ருமேனியாவில் சூரியகாந்தி விதைகளை வைத்து அல்வா செய்வார்கள். யூதர்களின் அல்வாவில் சபோரினா என்கிற ஒருவகை வேரும், எள்ளும்தான் முக்கியம். பல்கேரியா மக்கள் அல்வாவை வைத்து போட்டி விளையாட்டுகளை விளையாடுவர்.
நம் ஊர் கேசரியை வெளிநாட்டினர் கேசரி அல்வா என அழைக்கிறார்கள். கிரீஸ் நாட்டில் சீஸ் அல்வா பிரபலம். ஈரானிய மக்களுக்கு ரமலான் நோன்பை முடித்து வைக்கும் உணவு அல்வாதான்.
திருநெல்வேலி இருட்டு கடை அல்வா ஃபேமஸ் போல கேரளா அலுவா, காசி ஹல்வா, பிரபலம். அல்வாவில் பல வெரைட்டி கள் வந்துவிட்டன. கோதுமை அல்வா முதல் பாதாம் கேசர் அல்வா என பல புதுமையான அல்வாக்கள் தற்போது விற்பனையில் உள்ளன. அல்வாவை முதலில் நெய்யில்தான் முழுமையாக செய்ய பட்டது. தற்போதெல்லாம் ஆயில், வனஸ்பதி என தரமும், சுவையும் மாறுதலாக பல்வேறு சுவையில் செய்யப்படுகிறது.
நெய்யில் செய்தால் திகட்டாமல் இருக்கும். ஆயில் மற்ற பொருட்களை கொண்டு செய்ய நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளை கொடுத்துவிடும். அல்வாபதம் வர தாமதமானால் கார்ன்ஃப்ளோரை சிறிது கரைத்து விட பதம் சரியாக வருவதுடன் பளபளப்பாக பார்க்க அழகாக இருக்கும்.