பர்மாவின் ஸ்பெஷல் பானமான ‘மோலேசா’ சாப்பிட்டு இருக்கீங்களா?

மோலேசா...
மோலேசா...

மோலேசா பர்மாவில் மிகவும் பிரபலமான இனிப்பு பானமாகும். இந்த பானம் பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அத்தகைய சுவையான மோலேசாவை எப்படி வீட்டிலேயே ஈசியாக செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-1/2 கப்.

துருவிய தேங்காய்-1/2 கப்.

பாதாம் பிசின்-1கப்.

வெல்லம்-1கப்.

ஐஸ்கட்டி- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் ½ கப் பச்சரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு துருவிய தேங்காய் ½ கப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பாலை எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 2கப் தண்ணீர் சேர்த்து கூடவே கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு இப்போது நாம் அரைத்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கி விட்டுக்கொண்டே வேகவைக்கவும். தொடர்ந்து கலக்கி விட வேண்டும் இல்லையென்றால் மாவு கட்டி விழுந்துவிடும். இப்படியே கலக்கி கொண்டு 15 நிமிடம் வரை வேகவைக்கவும். இப்போது அரிசி மாவு நன்றாக வெந்து கட்டியாகி விடும்.

இதையும் படியுங்கள்:
யோகாவின் தலைநகரம் எது தெரியுமா?
மோலேசா...

இப்போது ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீர் எடுத்துக் கொண்டு அதன் மீது ஜல்லி கரண்டியில் செய்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக வைத்து அழுத்தி விடவும். சேமியா போல நீட்டு நீட்டாக மாவு கிடைக்கும். அதற்கு பெயர் ரைஸ் டிராப்ஸ். இப்படியே எல்லா மாவையும் பிழிந்து ரைஸ் டிராப்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது அந்த ரைஸ் டிராப்ஸை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1கப் வெல்லத்திற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வெல்லம் கொதி வந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். பாதாம் பிசினில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளுங்க.

இப்போது ஒரு கண்ணாடி கிளேசை எடுத்துக்க்கொண்டு. அதில் பாதாம் பிசின் 2 தேக்கரண்டி சேர்க்கவும், சேமியா போன்று செய்து வைத்திருக்கும் ரைஸ் டிராப்ஸை 2 தேக்கரண்டி சேர்க்கவும், பிறகு 2 கரண்டி தேங்காய் பால் சேர்க்கவும். அத்துடன் வெல்லம் தண்ணீர் 2 கரண்டி சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இப்போது மோலேசா பானத்தில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான மோலேசா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com