யோகாவின் தலைநகரம் எது தெரியுமா?

யோகா...
யோகா...

யோகா என்பது மனித வாழ்கையில் மிகவும் முக்கியமாக பின்பற்ற  வேண்டிய ஓர் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த ஒழுக்கநெறியாகும். இதனை ஒரு கலை என்றும்கூட சொல்லலாம்.  இது மனிதனுடைய மனதுக்கும் உடலுக்கும் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்தவும், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

யோகா:

யோகா என்ற சொல் வடமொழி வேர்ச்சொல்லான ‘யுஜ்’ என்பதிலிருந்துதான் உருவாகியுள்ளது. இதனுடைய பொருள் இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது என்பதாகும். அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது அல்லது ஒன்றுசேர்ப்பது. இதற்கு ‘சங்கமம்’ என்ற பொருளும் ‘ஒன்றாக  கலத்தல்’ என்ற பொருளும்கூட உண்டு. யோகா என்பது உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே ஆகும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் மற்றும் மன அழுத்தங்களை குறைக்கவும் உதவுகிறது.

யோகாவின் தோற்றம்:

யோகாவை பற்றிய வரலாற்று ஆதாரமானது சிந்து – சரஸ்வதி நதி சமவெளி நாகரிக இடங்களில் கிடைத்த கலை பொருட்களில் கிடைத்துள்ளது. இந்த சிந்து நதி நாகரிகம் என்பது உலகிலேயே பழமையான ஒரு பெரிய சமூகத்தின் வரலாறாக கருதப்படுகிறது. இங்கு நடந்த தொல்பொருள் ஆய்வின்போது கிடைத்துள்ள கல்முத்திரைகள் யோகாசனங்களை குறிக்கின்றன. இதன் மூலம் யோகா சுமார்  3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருப்பது  நிரூபிக்கப்பட்டுள்ளது.

யோகா...
யோகா...

பதஞ்சலி முனிவர் கொடுத்த வடிவம்:

பல நூல்களில் சிதறிக்கிடந்த யோகக்கலையை, திரட்டி, வடிவமைத்து,  அதனை ஒன்றுசேர்த்து ஒரு முழுமையான கலையாக மாற்றியது பதஞ்சலி முனிவர்தான். அவரது நூலான ‘யோகா சூத்திரம்’ என்பதில் மொத்தமாக 195 சூத்திரங்கள் அடங்கியுள்ளன. இந்த புத்தகமானது சுமார் 2500 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. யோகா பயில வேதநூல்களை படிப்பது கட்டாயமாகும். மனித வாழ்வின் துன்பங்களை போக்க, கர்மயோகம் (உழைப்பு), ஆழ்ந்த தியானம் (ஞான யோகம்) இவைதான் உதவும்.  பிறகு மனித உடலை பேணுவதும் யோகாதான் என்ற கொள்கையானது பெரும்பாலான மக்களால்  உணரப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியில் திளைக்கும் பின்லாந்து நாடு பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்...!
யோகா...

யோகாவின் தலைநகரம் எது?

வடஇந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ் என்ற இடம்தான் உலகளவில் யோகாவின் தலைநகரமாக அறியப்படுகிறது. இந்த ரிஷிகேஷ் தான் குரு வசிஷ்டர், சுவாமி சிவானந்த் போன்ற பல பிரபல ஆன்மிகத் தலைவர்களின் தாயகமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com