
தேவையான பொருட்கள்:
முற்றிய பப்பாளி காய் -1கிலோ
சர்க்கரை - 350 கிராம்
முந்திரி பருப்பு - 150 கிராம்
கொப்பரை தேங்காய் - 1/2 மூடி
தேங்காய் துருவல் - 11/2 கப்
கோக்கோ பவுடர் - 4 ஸ்பூன்
பால் - 1/2 லிட்டர்
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பப்பாளியை கழுவி சுத்தம் செய்து தேங்காய் துருவல் போல் துருவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்து வருகையில் தேங்காய் துருவல், பப்பாளி துருவல் முதலியவற்றை போட்டு கிளறி கொண்டே இருக்கவும். இந்த கலவை கெட்டியாக வந்ததும், இறக்கி தனியே வைக்கவும்.
கொப்பரை தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய்யில் வறுத்து கொள்ளவும். அதேபோல் முந்திரி பருப்பையும், ஒடித்து நெய்யில் வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையை கொட்டி கலந்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கொதித்து பாகு கெட்டியாகி கம்பி பதத்தில் வரும் போது பப்பாளி கலவை, கோக்கோ பவுடர், முந்திரி பருப்பு, கொப்பரை தேங்காய் துண்டு ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கி வைக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பி கேக்குகளாக வெட்ட வேண்டும். பர்பி வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருக்கும்.