மீன் குழம்பு முதல் சர்பத் வரை... சுவையை பல மடங்கு கூட்டும் புளிப்பும் கசப்பும் சேர்ந்த ஹெல்த்தி ஃப்ரூட்!

Kokum fruit
Kokum fruit
Published on

ந்தியாவை தாயகமாகக் கொண்ட கோகும் ஃபுரூட் (Kokum Fruit) அநேக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்ட இப்பழம், நல்ல செரிமானத்துக்கும், எடைக் குறைப்பிற்கும், வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. கோடைகாலத்தில்  இப்பழத்தை எவ்வாறெல்லாம் உபயோகிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

கோகும் பழத்துடன் தண்ணீர், சர்க்கரை அல்லது தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாற கோடைக்கேற்ற, புத்துணர்ச்சி தரும் ஒரு சிறப்பான குளிர்பானம் அருந்திய திருப்தி கிடைக்கும்.

கோகும் பழத்துடன் தண்ணீர், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கோகும் மிருதுவாகும் வரை கொதிக்க விடவும். பின் வடிகட்டி, தேவையான அளவு தண்ணீர் அல்லது சோடா சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து குளிரூட்டி எடுத்தால்  கோகும் சர்பத் கிடைக்கும்.

கோகும் சிரப்பை தண்ணீரில் கலந்து பிரீசரில் வைத்து எடுத்து, உணவுக்குப் பின் புத்துணர்ச்சி தரும் லைட் டெஸ்ஸர்ட்டாக அருந்தலாம்.

மீன், பிரான், வெஜிடபிள் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள் மற்றும் ஸ்டூ போன்றவற்றில் கோகும் சேர்த்து செய்யும்போது அதிலுள்ள லேசான புளிப்பும் கசப்பும் சேர்ந்த சுவையானது அவ்வுணவுகளுக்கு தனித்துவம் மிக்கதொரு சிறப்பான சுவையைத் தரும்.

உலர வைத்த சில கோகும் துண்டுகளை இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு வைத்து பின் அந்த கோகும் இன்ஃப்யூஸ்ட் (kokum-infused) நீரை நாள் முழுவதும் அருந்தி அதன் சுவையோடு ஆரோக்கிய நன்மைகளையும் பெற்று மகிழலாம்.

கோகும் கான்சென்ட்ரேட், ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ், உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து அக்கலவையை நமக்குப் பிடித்த சாலட் மீது டாப்பிங்ஸ்ஸாகப் பரத்தி உண்ண, சுவையும் ஆரோக்கியமும் கூடும்.

இதையும் படியுங்கள்:
'ஈகிள்' பார்வை வேணுமா? இந்த 5 வைட்டமின் உணவுகள் போதும்!
Kokum fruit

ஊறவைத்த உலர் கோகும் பழத் துண்டுகளுடன் தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்தால் சுவை மிக்க சட்னி கிடைக்கும். இதை சாப்பாட்டுடன் அல்லது ஸ்நாக்ஸ்ஸுடன் சேர்த்து உண்ணலாம்.

கோகும் கான்சென்ட்ரேட்டை யோகர்ட்டுடன் கலந்து ஒரு சுவையான யோகர்ட் டிப் அல்லது சாஸ் செய்யலாம்.

இதை ஸ்நாக்ஸ் மற்றும் கெபாப்ஸ்ஸுடன் தொட்டு சாப்பிடலாம். க்ரில்ட் மீட் அல்லது வெஜிடபிள்ஸ் மீது டாப்பிங்ஸ்ஸாக வைத்தும் உண்ணலாம்.

மேற்கண்ட வழிகளில் கோகும் பழத்தை உட்கொண்டு நாமும் பயனடையலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com