
வேர்க்கடலையின் ஊட்டச்சத்து தன்மை, அதிக புரத உள்ளடக்கம் மற்றும் திருப்திகரமான மொறுமொறுப்பு காரணமாக இது ஒரு சிறந்த சிற்றுண்டி தேர்வாக இருக்கும். அவை ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் நியாசின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்களின் நல்ல சமநிலையை வழங்குகின்றன.
வேர்க்கடலையில் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன, அவை இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. இதய ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்புகளை கரைக்கும் பணியில் இந்த ரசாயன சத்து ஈடுபடுகிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. மேலும் இதனால் கூடுதலாக உடம்பில் சதை போடாது.
வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப்பொருள்கள் நரம்பு செல்களை நன்கு செயல்படத் தூண்டும். இதனால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புள்ள பார்க்கின்சன், அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்.
படிக்கும் மாணவ, மாணவியர் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஞாபகமறதி ஏற்படாது என்கிறார்கள்.உணவு ஆய்வாளர்கள். மேலும், நரம்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு.
வேர்க்கடலையில் 30 விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.இதில் புரதம் அதிகம்.வேர்கடலையின் மேலுள்ள தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை நீக்காமல் சாப்பிடுவது அவசியம்.
பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அவித்த வேர்க்கடலையை சாப்பிட கொடுத்து வந்தால் சோர்வடைந்து வரும் அவர்களின் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கிறார்கள்.
நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் இருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை "கிளை செமிக் இன்டெக்ஸ்"என்பார்கள்.இது வேர்க்கடலையில் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. மேலும் வேர்க்கடலையின் மேல் உள்ள பிங்க் கலர் தோலுக்கு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.அதுமட்டுமின்றி, வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை துரிதப்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது. வேர்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.
ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு.இதனால் வேர்க்கடலையை சாப்பிட ரத்த அழுத்தம் அதிகரிக்காது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும். தினமும் 50 கிராம் வேர்க்கடலை அவித்து சாப்பிட வேண்டும். வறுத்து கூட சாப்பிடலாம் .ஆனால் எண்ணெயில் பொரித்து சாப்பிடக் கூடாது. அதேபோல வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.