அல்லிராணியின் ஆரோக்கிய குறிப்புகள்!

health tips...
health tips...
Published on

ருப்பட்டி உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும். கல்லீரல் நச்சுக்களை அகற்றும். கருப்பையை வலுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதனை சுக்கு, சீரகப் பொடியுடன் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.

சீரகம், இஞ்சி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர நன்கு பசி எடுக்கும். பசித்துப் புசிக்க உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நார்ச்சத்து மிகுந்த கொய்யாப்பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டு வர மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமிராது.

விளாம்பழத்தை அடிக்கடி உணவில் பச்சடியாக செய்து சாப்பிட்டு வர பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் குணமாகும்.

இடுப்பு வலிக்கு உளுத்தங்கஞ்சி, முட்டி வலிக்கு முடக்கத்தான் கீரை மசியல், ஜீரணத்திற்கு இஞ்சி சொரசம், உடம்பு வலிக்கு திப்பிலி மிளகு ரசம், முதுகு வலிக்கு சுடு தண்ணீர் ஒத்தடம் என செய்ய வலி பறந்தோடிவிடும்.

நார்சத்து மிகுந்த பனங்கிழங்கை சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சனை இராது. சர்க்கரை நோயை வரவிடாது.

பப்பாளி பழத்துண்டுகள் தினம் ஒரு கப் அளவில் எடுத்துக் கொள்ள சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்தாகும். நரம்புகளை பலப்படுத்தும். மாதவிடாய் கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.

முருங்கைப் பிஞ்சை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.

நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் போட்டு அதன் சாற்றை மட்டும் விழுங்கி வர இருமல் குறையும். அதிமதுர பொடியை தேனில் குழைத்து சாப்பிட தொண்டைக்கட்டு இருமல் சளி குணமாகும்.

தண்டுக்கீரை உடல் வெப்பத்தை தணிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சிறுநீர் பிரச்சனைகளையும் தீர்க்கும். வாரம் ஒரு முறை தண்டுக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பருத்திப்பால் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது. ரத்த அழுத்தத்தை சீர்படுத்தக் கூடியது. வயிற்றுப்போக்கு, குடல் புழு போன்ற வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் நன்மை அளிக்கக் கூடியது.

வாரம் ஒரு முறையாவது வஜ்ரவல்லி எனப்படும் பிரண்டை கொண்டு துவையல் செய்து சாப்பிட மூளை நரம்புகளை பலப்படுத்தும். எலும்புகளுக்கு சக்தி கொடுக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நல்ல பசியை உண்டாக்கும்.

இதையும் படியுங்கள்:
நன்றை செய்க... அதை இன்றே செய்க!
health tips...

பூண்டில் இருக்கும் மருத்துவ குணம் உடலின் கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது. பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பு புரதத்தை குறைத்து இதயத்தை காக்கக்கூடியது. எனவே பூண்டுப் பொடி, பூண்டு ரசம், பூண்டு குழம்பு என எடுத்துக் கொள்ளலாம்.

மிடுக்கான உடலைப் பெற உடற்பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் மிகவும் அவசியம்.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள கேரட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன் நார்ச்சத்து, விட்டமின்கள், மினரல் ஆகியவை அதிகம் உள்ளது. கல்லீரலில் தேங்கும் நச்சுக்களை அகற்றும் ஆற்றல் கேரட் ஜூஸிற்கு உண்டு. இவற்றில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் இதய தசைகள் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com