
பிரட் கார்ன் போண்டா:
வேகவைத்த சோளம் 1 கப்
பிரட் பாக்கெட் 1
வெங்காயம் 1
காரட். 1
இஞ்சி சிறு துண்டு
பச்சை மிளகாய் 1
காரப்பொடி 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
கொத்தமல்லி சிறிது
கறிவேப்பிலை சிறிது
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேரட்டை துருவலில் துருவிக்கொண்டு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து கடுகு பொரிந்ததும் வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், மிளகாய் தூள், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வேகவைத்த சோளத்தை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து அதனை வதக்கி வைத்த வெங்காய கலவையுடன் சேர்த்து கலந்து தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து சின்னச் சின்ன எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிரட் துண்டுகளின் நான்கு ஓரங்களையும் நறுக்கி நீக்கிவிடவும். ஒவ்வொரு பிரெட் துண்டையும் தண்ணீரில் நனைத்து உள்ளங்கையில் வைத்து லேசாக பிழிந்து அதன் நடுவில் உருட்டி வைத்துள்ள சோள உருண்டைகளை வைத்து மூடி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிகவும் ருசியான பிரட்ச் சோள போண்டா ரெடி.
ஹெல்த்தி கார்ன் சூப்:
வேகவைத்த சோளம் 1 கப்
பூண்டு 2 பற்கள்
சின்ன வெங்காயம் 6
கொத்தமல்லி சிறிது
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
சர்க்கரை 1/2 ஸ்பூன்
நெய் ஒரு ஸ்பூன்
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த கார்னையும் சேர்த்து ரெண்டு கிளறு கிளறி தேவையான உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் இறக்கி ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ருசியைக் கூட்ட சர்க்கரை அரை ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். மிகவும் சுவையான, குளிருக்கு ஏற்ற கார்ன் சூப் தயார்.