ஆரோக்கியமான சிறுதானிய அடை - செய்முறை விளக்கம்!

healthy foods
Healthy cereal foods
Published on

பொதுவாக நாம் எல்லோருமே இந்த இனிப்பு மற்றும் உப்பு அடையை வருடத்தில் ஒரு தரவை காரடையான் நோன்பு அன்னிக்குதான் செய்வோம்.‌ அதுவும் அரிசி மாவில் இல்லையா?

நாம் அரிசியை தவிர வேற மெத்தட்லேயும் முயற்சி செய்து பார்க்கலாம் இல்லையா. இந்த மில்லட்ஸ் மாவுகளை வைத்து அடை செய்தால் சூப்பராக இருக்கும். சுவையும் அலாதி. ஆரோக்கியமும் டபுள். இதை மாதிரி மில்லட்ஸில் அடையை வாரத்திற்கு ஒருமுறை கூட செய்து சாப்பிடலாம். சரி, வாங்க.. எப்படி செய்கிறது என்று பார்க்கலாம்.

இந்த அடையை கம்பு கேழ்வரகு வெள்ளைச் சோளம் போன்ற சிறு தானியங்களின் மாவால் செய்யலாம். அதாவது ஆங்கிலத்தில் Raagi, bajra, jowar என்று சொல்லப்படும் millets flour ல் செய்யலாம்.

செய்முறை:

முதலில் இரண்டு கப் மாவை எடுத்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். எதாவது ஒரு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். எதில் வேண்டுமானாலும் செய்யலாம். பிறகு அதை இரண்டு பங்காக பிரித்துக்கொள்ளவும் அதாவது ஒரு கப் உப்பு அடைக்கும் ஒரு கப் வெல்ல அடைக்கும்.‌ ஒரு மீடியம் சைஸ் கப்பில் செய்தால் 7 அல்லது 8 அடை வரும். உங்களுக்கேற்றவாறு அளவை அதிகரித்து கொள்ளவும்.

உப்பு அடை:

ஒரு வானலியை அடுப்பில் வைத்து காய்ந்த பின் நான்கைந்து ஸ்பூன் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.‌ பிறகு நான்கைந்து பச்சை மிளகாயை நறுக்கி போடவும். சிறிதளவு தேங்காய் துருவலையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். சிறிது வதங்கிய பின் இரண்டு கப் தண்ணீரை சேர்க்கவும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு ஒரு கப் மாவை போட்டு கிளறவும்.‌ மிதமான தீயில் வைத்து நன்றாக வேகும் அளவிற்கு கிளறவும். மாவு கையில் ஒட்டிக்கொள்ளாத பதத்திற்கு வரும்போது அடுப்பை அணைக்கவும். ஆறிய பிறகு கைகளால் வட்ட வடிவில் தட்டியோ அல்லது பிடி கொழுக்கட்டை போல ஓவல் ஷேப்பில் பிடித்து வைத்து, இட்லி தட்டில் வைத்து 15 நிமிடத்திற்கு வேக வைத்து எடுக்கவும். சுவையான மில்லட்ஸ் உப்பு அடை ரெடி. இத்துடன் தொட்டுக் கொள்வதற்கு சட்னியோ அல்லது சாம்பாரோ செய்யலாம். இல்லை என்றால் குருமாவோட சேர்ந்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான காலை மற்றும் மாலை நேர உணவுகள்!
healthy foods

வெல்ல அடை:

வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு கப் மாவிற்கு ஒரு மீடியம் சைஸ் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் மிதமான பாகு பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு தேங்காய் துருவலையும் ஏலக்காய் பொடியையும் சேர்க்கவும். இப்பொழுது மாவை மெதுவாக கொட்டி கிளறவும் மாவு நன்றாக பந்து போல் வரும் வரை கிளறி பிறகு அடுப்பை அணைக்கவும். விருப்பமுள்ளவர்கள் மாவு சேர்ப்பதற்கு முன்னால் டிரை ஃப்ரூட்ஸையுயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் சுவையாக இருக்கும். மாவு ஆறிய பிறகு அடையாகவோ அல்லது பிடி கொழுக்கட்டையாகவோ பிடித்து இட்லி தட்டில் வைத்து 15 நிமிடத்திற்கு வேகவைத்து எடுக்கவும். சுவையான மில்லட்ஸ் வெல்ல அடை ரெடி.

முக்கிய குறிப்புகள்:

எந்த மில்லட்ஸ் மாவாக இருந்தாலும் நன்றாக வறுக்க வேண்டும்.

தண்ணீரில் போட்ட பிறகு மிதமான தீயில் நன்றாக வேகும் வரை கிளற வேண்டும். ஏனென்றால் மில்லட்ஸ் மாவு பார்ப்பதற்கு வெந்தது போல இருக்கும்.‌ ஆனால் சாப்பிடும்போது வாயில் ஒட்டிக்கொள்ளும். மாவை நன்றாக வறுத்து வேகவைத்து செய்தால் வாயில் ஒட்டிக்கொள்ளாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com