இனிப்பான பரங்கிக்காய் பொரியலும், கலர்ஃபுல்லான பரங்கிக்காய் சப்பாத்தியும்!

healthy chappathi recipes in tamil
healthy chappathi recipes
Published on

பரங்கிக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய்- கால் கிலோ

தேங்காய்த் துருவல்- ரெண்டு டேபிள் ஸ்பூன்

வெல்லத் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு- தாளிக்க தேவையான அளவு

கருவேப்பிலை- ஒரு ஆர்க்

வேர்க்கடலை- ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

பரங்கிக்காயின் தோல், விதைகளை நீக்கி ஒரே அளவான சிறிய துண்டுகள் ஆக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து பரங்கித்துண்டுகள் சேர்த்து வதக்கி உப்புப் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் வெல்லத் துருவல்,தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி நன்றாக வெந்தவுடன் இறக்கவும். இனிப்பு, கார சுவையுடன் மிகவும் நன்றாக இருக்கும்.

பரங்கிக்காயை வாங்கும் பொழுது மிகவும் பழுத்ததாக வாங்காமல், அரை அல்லது முக்கால் திட்டம் பழுத்ததாக வாங்குவது தான் நல்ல ருசியைத் தரும். அதிகம் பழுத்துவிட்டால் கொழகொழவென்று இருக்கும் ருசிக்காது.

பரங்கி சப்பாத்தி

செய்யத் தேவையான பொருட்கள்:

கோதுமைமாவு- 2 கப்

பரங்கித் துருவல்- ஒரு கப்

ஓமம்/ சீரகம் -அரை டீஸ்பூன் கல்லுரலில் பொடித்தது

பச்சை மிளகாய்- இரண்டு பொடியாக நறுக்கியது

கருவேப்பிலை, கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது- ஒரு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி- ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
ஹெல்தி மில்லட் கபாப் & மீந்துபோன சாதத்தில் இன்ஸ்டன்ட் தோசை!
healthy chappathi recipes in tamil

செய்முறை:

கோதுமை மாவுடன் மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து சப்பாத்தியாகத் திரட்டவும். பின்னர் சப்பாத்தி கல்லை அடுப்பில் வைத்து, கல் காய்ந்ததும் திரட்டி வைத்த சப்பாத்தியை ஒரு பக்கம் போட்டு ஈரம் காய்ந்ததும் இரண்டாவது பக்கம் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் தேவையான அளவு எண்ணெய் விட்டு வெந்ததும் எடுத்து வைக்கவும்.

பார்ப்பதற்கு மஞ்சளும், பச்சையுமாக கலர்ஃபுல்லாக இருக்கும். குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இதனுடன் பட்டர் அல்லது தயிர் வைத்து சாப்பிடலாம். அல்லது விரும்பிய எந்தக் காய்கறியுடனும் சேர்த்து சாப்பிடலாம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கு பரங்கிக்காயை அடிக்கடி உபயோகப்படுத்தி சமையல் செய்து கொடுப்பது நல்லது.

சப்பாத்திகளை சிறிய அளவில் தேய்த்து செய்தால் திருப்பிப் போட்டு எடுப்பது எளிதாக இருக்கும். உடையாமல் வரும். நல்ல வட்டமாக அழகாகவும் இருக்கும். பரோட்டா வகைகளை பெரிய சைஸில் தேய்த்து செய்தால் அழகாகவும், இரண்டு ஒன்று சாப்பிட்டால் போதுமானதாகவும் இருக்கும்.

பரோட்டாவை முக்கோணம், சதுரம் என்று வகை வகையாக செய்து அசத்தினால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com