மொறு மொறு ஹோட்டல் ஸ்டைல் தோசை வீட்டிலேயே செய்ய உதவும் சத்தான சமையல் டிப்ஸ்!

தோசை, சப்பாத்தி, பூரி, எலுமிச்சை சாதம், குருமா, துவையல் வரை அனைத்தையும் மொறு மொறுப்பாகவும் ஊட்டச்சத்துடன் செய்ய அரிசி, பருப்பு, ஓட்ஸ், பார்லி, சோயா மாவு கலவையுடன் தரப்படும் பயனுள்ள டிப்ஸ்.
healthy-cooking-tips
healthy-cooking-tips
Updated on

தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசி ஊறவைக்கும் போது, 50 கிராம் வெள்ளை கொண்டைக்கடலை 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊறவைத்து அரைத்து எடுத்து, அரிசி அரைத்த தோசை மாவுடன் சேர்க்கவும். மொறு மொறு பேப்பர் ரோஸ்ட் பதத்தில் தோசை வருவதுடன் கூடுதல் ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

முளை கட்டிய பச்சை பயிறு, முளை கட்டில வெந்தயம் இவற்றுடன் ஊற வைத்த புழுங்கரிசி சேர்த்து அரைத்து தோசை சுட்டு சாப்பிட  சூப்பர் ருசியுடன் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்தும் போனஸாக கிடைக்கும்.

தோசைமாவில் தேங்காய் பாலை சேர்த்து தோசை வார்த்து பாருங்கள். சூப்பரா தோசையின் மணம் ஊரையே கூட்டும். மிகவும் சுவையாக இருக்கும்.

தோசைக்கு அரைக்கும்போது உளுந்துடன் ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை மொறுமொறுவென வரும்.

ஹோட்டல் தோசை போல் மொறு மொறுவென தோசை வேண்டுமா? தோசை மாவில் ஒரு கையளவு கடலை மாவு போட்டு நன்றாக கலந்து தோசை வார்த்து பாருங்கள் தோசையை திருப்பிய பின் அதில் வெண்ணெய் அல்லது நெய் தடவி விட்டால் ரோஸ்ட் போல வரும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது இஞ்சியும், பச்சை மிளகாயும் வதக்கி அரைத்து சேர்த்து இறக்கினால் சாதம் புதுசுவையில் இருக்கும். இதில் சிறிது வறுத்த வெந்தயப் பொடி செய்து தூவி விட்டால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

குருமா நீர்த்துவிட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்ஸை  பொடித்து போட்டால் குருமா நன்றாக கெட்டிப்பட்டு ருசியும் வித்தியாசமாக இருக்கும்.

முள்ளங்கி இலையை எண்ணெய் விட்டு வதக்கி காய்ந்த மிளகாய், உளுந்து பெருங்காயம் சேர்த்து வறுத்து துவையல் செய்தால் சுவையுடன்  சத்தும் அதிகம்.

கோதுமை மாவுடன் சமஅளவு பார்லி மாவு கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வயிறு சூட்டைத் தணிக்கும் சூப்பர் ரெசிபி... சத்துகள் நிறைந்த 'குலித் கலான்' செய்வது இவ்வளவு சுலபமா?
healthy-cooking-tips

சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சோயாமாவு சேர்த்து சப்பாத்தி பிசைந்து செய்தால் ருசியுடன் புரோட்டின் சத்து கிடைக்கும்.

கோதுமை மாவுடன் சிறிது சாதம் வடித்த கஞ்சி சேர்த்து பிசைந்து பூரி போட்டால் பூரி மொறு மொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிது எண்ணெய் ஒரு கரண்டி புளிக்காத தயிர்விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக வரும். கல்லில் போட்டதும் புஸ் ஸென்று 2ப்பி பார்க்கவும் சூப்பராக இருக்கும் நன்றாக இருக்கும்.

அரிசி உப்புமா செய்யும்போது கடுகு மட்டும் தாளித்து வைத்துக்கொண்டு உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, பெருங்காயம், தேங்காய் துருவல் இவற்றை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து தாளிக்கும்போது கலந்து உப்புமா கிளறி செய்தால் சுவையோ சூப்பர். தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது.

logo
Kalki Online
kalkionline.com