ஈஸியா செய்யலாம் ஹெல்தியான ஹனிபால்ஸ்!

ஈஸியா செய்யலாம் ஹெல்தியான ஹனிபால்ஸ்!

ன்றாடம் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் அம்மாக்கள் களைத்து விடுகிறார்கள். என்ன செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் ஈசியான ரெசிபியா இருக்கணும் அதே சமயம் சத்துள்ளதாகவும் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த டேஸ்டியான ஹெல்தியான ஹனிபால்ஸ். வாங்க செய்யலாம்.

தேவையானவை:

முந்திரி -10
பாதாம் -10
பிஸ்தா -10
பேரிச்சை - 5
வேர்க்கடலை - 1 டீ ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
தேங்காய் - சிறிய கப் ( துருவியது)
தேன் - 1 டே. ஸ்பூன்


செய்முறை:
தில் உள்ளவைகளை பேரீச்சை தவிர்த்து தனித்தனியே அடுப்பை சிம்மில் வைத்து மெலிதான வாசம் வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் பேரிச்சையுடன் ஒன்றாக மிக்சியிலிட்டு கொரகொரப்பாக பொடிக்கவும். அதை ஒரு பவுலில் இட்டு அதனுடன் தேனை சிறிது சிறிதாக சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
இனிப்பாக இருப்பதால் நிச்சயமாக குழந்தைகள் சத்து மிகுந்த ஸ்நாக்ஸை விரும்பிக் கேட்டுச் சாப்பிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com