
முதலில் இடியாப்ப மாவை தயார் செய்து கொள்வோம். 4 கப் பச்சரிசி, 4 ஸ்பூன் உளுந்தம் பருப்பு இரண்டையும் நீரில் களைந்து, நீரை வடித்து விட்டு, நிழலில் உலர்த்தி மாவாக அரைக்கவும். அதை வாணலியில் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
இனிப்பு இடியாப்பம்
தேவை:
இடியாப்ப மாவு - 2 கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை:
இடியாப்ப மாவில் வெந்நீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாக பிசைந்து இடியாப்ப அச்சில் மாவை நிரப்பி, பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து, அதனுடன் சர்க்கரை, நெய், தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள் கலந்து கிளறி எடுத்தால், இனிப்பு இடியாப்பம் தயார்.
எலுமிச்சை இடியாப்பம்
தேவை:
இடியாப்ப மாவு - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
இடியாப்ப மாவில் வெந்நீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, இடியாப்ப அச்சில் நிரப்பி, ஆவியில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, வெந்த இடியாப்பங்கள், உப்பு சேர்த்துக்கிளறி, எலுமிச்சை சாறு கலந்துவிட்டால், சுவையான எலுமிச்சை இடியாப்பம் தயார்.
உளுந்தம் பருப்பு அல்வாவும், கார போளியும்
உளுந்தம் பருப்பு அல்வா
தேவை:
உளுத்தம் பருப்பு ஒரு கப்
பசு நெய் அரை கப்
பால்கோவா - நா கப்லு ஸ்பூன்
சர்க்கரை ஒரு கப்
பன்னீரில் கரைத்த குங்குமப்பூ சிறிது
முந்திரி,பாதாம் பருப்புகள் தலா ஆறு.
செய்முறை;
உளுத்தம் பருப்பை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் நெய் விட்டு, உளுந்த மாவு விழுதை போட்டு கிளறவும். மாவு லேசாக சிவந்ததும், பால்கோவாவையும் சர்க்கரையையும் போட்டு கிளறவும்.. ஹல்வா பதம் வரும்போது நெயில் வருத்த முந்திரி, பாதாம், பருப்புகளை சேர்க்கவும். பன்னீரில் கரைத்த குங்குமப்பூவையும் கலந்து சற்று நேரம் மூடி வைத்து, பிறகு தாம்பாளத்தில் கொட்டி பரப்பி வில்லைளாக போடவும். சுவையான, சத்தான உளுந்தம் பருப்பு அல்வா ரெடி.
கார போளி
தேவை:
கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு தலா 1 கப்
கோதுமை மாவு 2 கப்
மல்லித்தழை நறுக்கியது அரை கப்
பெருங்காயத்தூள் சிறிது
எலுமிச்சம்பழம் 1
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் 4
செய்முறை:
கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் நீரில் ஊற வைத்து, நன்கு ஊறியதும், நீரை வடித்து விட்டு, உப்பு, பச்சை மிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். கார பூரணம் தயார். கோதுமை மாவை நீர் விட்டு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி அவற்றில் குழி செய்து காரப்பூர்ணத்தை வைத்து தட்டி போளிகளாக இடவும். தோசை கல்லில் எண்ணெய்விட்டு போளிகளை வேகவைத்து, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான, வித்தியாசமான, கார போளி தயார்.