சமையலறைக் குறிப்புகள்: சுவையை உயர்த்தும் சில எளிய இரகசியங்கள்!

Kitchen tips
Healthy Kitchen tips
Published on

ப்பளம் பொரிக்கும்போது அதை நான்காக மடித்து வைத்துக்கொண்டால் கொஞ்ச எண்ணையிலேயே பொரித்துவிடலாம்.

மெதுவடை செய்யும்போது, உளுந்தை சரியாக அரைமணி நேரம் ஊறவைத்தால் போதும். முக்கால் பாகம் ஊறியும், கால்பாகம் ஊறாமல் இருப்பதுதான் சரியான பதம்.

அவலை சுத்தம் செய்து பொடித்து வைத்துக்கொண்டு, தோசை வார்க்கும்போது கலந்து ஊற்றினால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

வாழைப்பழத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி, தயிரில் போட்டு சர்க்கரை கலந்து சாப்பிட்டுப் பாருங்கள். சூப்பர் லஸ்ஸி ரெடி.

குளிர்காலத்தில் தயிர் இலேசில் உறையாது. உறை போட்ட பால் பாத்திரத்தின் மேல் இன்னொரு பாத்திரம் கவிழ்த்து வைத்தால் கெட்டியாக உறைந்துவிடும்.

வெந்த கீரையை மிக்ஸியில் போட்டு வைப்பரில் ஒரு சுற்று சுற்றினால் நொடியில் மசிந்துவிடும். சாப்பிடவும் சக்கை இல்லாமல் இருக்கும்.

தக்காளிப் பழத்தை ரசத்தில் சிறுதுண்டுகளாக வெட்டிப் போடுவதைத் தவிர்த்து, மிக்ஸியில் அரைத்துப்போட்டு செய்தால் ரசத்தின் சுவையே அலாதிதான்.

தேன்குழல் செய்யும்போது, உளுத்தம் பருப்பு வறுத்துப் போடுவதுடன், ஒரு டம்ளர் பச்சரிசியைச் சேர்த்து வறுத்து அரைத்தால், பிசு பிசுப்பாக இல்லாமல் நன்றாக பிழியலாம்.

பஜ்ஜி மாவில் சிறிது வெள்ளை எள்,கடுகு, தேங்காய்த் துருவல் சேர்க்க சாப்பிட பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும்.

எள், துருவிய தேங்காய், வேர்க்கடலை இவற்றை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைத்து, கத்தரிக்காய் மசாலாவில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

குளிர்காலத்தில் இட்லி மாவு இலேசில் பொங்காது. குக்கரில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, கீழே இறக்கி அதில் மாவு பாத்திரத்தை வைத்து மூடிவிடவும். மறுநாளே மாவு பதமாய் பொங்கியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியின் ஆதாரம்: கீரைகளின் மருத்துவப் பொக்கிஷங்கள்!
Kitchen tips

கேஸ் லைட்டரின் மீது ரேடியம் ஸ்டிக்கரை ஒட்டி வையுங்கள். வீட்டில் மின்சாரம் தடை படும்போது தேடியெடுக்க சுலபமாக இருக்கும்.

வடை கரகரப்பாகவும், எண்ணெய் குடிக்காமலும் இருக்க பருப்பு வகைகள் பத்தே நிமிடங்கள் ஊறினாலே போதும்.

கேரட்டை தோல் சீவி, ஆவியில் வேகவைத்து, மிக்ஸியில் மை போல் அரைக்கவும். அத்துடன் பால், சர்க்கரை, நெய் ஊற்றிக் கிளறி, சிறிதளவு எஸன்ஸ் விட்டால் சுவையான கேரட் அல்வா ரெடி.

சுக்கு வாங்கி அதிக நாட்கள் வைத்தால் உளுத்து பொடியாகிவிடும். கொஞ்சம் கிராம்புவுடன் சேர்த்து வைத்தால் கெடாது. மோர்க்குழம்பு செய்து இறக்கியதும், பொரித்த உளுந்து

அப்பளம் இரண்டை நறுக்கிப்போட்டு மூடி வைத்துவிடுங்கள். மோர்க்குழம்பு சுவை மிகுந்து இருக்கும்.

பால் சேர்த்துச் செய்யும் பட்சணங்களுக்கு, பாலை நன்கு காய்ச்சிய பிறகு சர்க்கரை சேர்க்கவும். காயாத பாலில் சர்க்கரை சேர்த்தால் திரிந்துவிட வாய்ப்புண்டு.

அவசரத் தேவைக்கு சீஸ் துண்டுகளில்கூட பஜ்ஜி போடலாம். சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com