பாரம்பரிய சுவையில் ஆரோக்கியமான முருங்கைப் பூ நூடுல்ஸ்!

healthy recipes in tamil
Murungai flower noodles!
Published on

தேவையான பொருட்கள்:

ஹக்கா நூடுல்ஸ்- ஒரு பாக்கெட்

முருங்கைப் பூ -  இரண்டு கைப்பிடி

சின்ன வெங்காயம்-  10

பச்சை மிளகாய் - ஒன்று

கருவேப்பிலை – சிறிதளவு

கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்

மிளகாய்த்தூள்-  ஒரு ஸ்பூன்

உப்பு

செய்முறை:

ரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து, அதில் ஹக்கா நூடுல்சை போடவும். அடுப்பை அணைத்து விட்டு, அதை ஒரு நிமிடம் மட்டும் மூடிவைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு நூடுல்சை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய்,  வெங்காயம் போட்டு, சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைப் பூவையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.

மூன்று நிமிடம் கழித்து ஹக்கா நூடுல்சை சேர்த்து, கரம் மசாலா, மிளகாய் தூளையும் போட்டு நன்றாக கலந்து விட்டு, இரண்டு நிமிடம் வேகவைத்து எடுத்தால், சுவையான சத்தான முருங்கைப்பூ ஹக்கா நூடுல்சை ரெடி.

இதையும் படியுங்கள்:
தீபாவளிப் பலகாரங்கள்: தரம் பார்த்து வாங்க வேண்டியதன் அவசியம்!
healthy recipes in tamil

பயன்கள்:

மைதாவில் செய்த பிற நூடுல்ஸ் போல அல்லாமல், முழுக்க முழுக்க கோதுமை மாவில் செய்த ஹக்கா நூடுல்ஸ் அனைவருமே சாப்பிட ஏற்றது. குறைந்த அளவு கொழுப்பும், அதிக புரதமும் நிறைந்திருக்கிறது. அத்துடன் முருங்கைப்பூவின் இரும்புச் சத்தும் சேர்வதால், அற்புதமான டிஷ் இது. உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு அற்புதமான சாய்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com