
இன்றைக்கு ஆரோக்கியமான கருப்பு கவனி அரிசி மற்றும் தேங்காய் மங்காய் துவையல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கருப்பு கவனி அரிசி இட்லி செய்ய தேவையான பொருட்கள்.
கருப்பு கவனி அரிசி-2 கப்
சிகப்பு அவல்-1/2 கப்
கருப்பு உளுந்து-1/2 கப்
உப்பு-1 ¼ தேக்கரண்டி
வெந்தயம்-1 தேக்கரண்டி
கருப்பு கவனி அரிசி இட்லி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 2 கப் கருப்பு கவனி அரிசியை எடுத்துக் கொள்ளவும். சிகப்பு கெட்டி அவல் ½ கப், கருப்பு உளுந்து ½ கப் சேர்த்து நன்றாக கழுவிய பிறகு இதனுடன் 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊற வைத்து விடவும்.
இப்போது ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து 1 ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்துவிட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த மாவை 9 மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ளவும்.
இப்போது புளித்த மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் டேஸ்டியான கருப்பு கவனி அரிசி இட்லி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
தேங்காய் மாங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்.
நறுக்கிய மாங்காய்-1
தேங்காய்-1
காய்ந்த மிளகாய் -5
சீரகம்-1 தேக்கரண்டி
கருவேப்பிலை-சிறிதளவு
கடுகு-1 தேக்கரண்டி
வெந்தயம்-1 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
தேங்காய் மாங்காய் துவையல் செய்முறை விளக்கம்.
முதலில் மாங்காய் 1 சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் 1 சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் சிறிதளவு சேர்த்து அதில் கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, சீரகம் 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 5 சேர்த்து வதக்கிவிட்டு இது ஆறியதும் மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் மாங்காய் 1, துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான மாங்காய் தேங்காய் சட்னி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.