இட்லிகள் மீந்து விட்டதா? கவலையை விடுங்க… ஈஸியா செய்யலாம் தக்காளி இட்லி உப்புமா!

இட்லிகள் மீந்து விட்டதா? கவலையை விடுங்க… ஈஸியா செய்யலாம் தக்காளி இட்லி உப்புமா!

வீட்ல இருக்குறங்களுக்கு வித்தியாசமா இப்படி ஒரு ரெசிபி செய்து கொடுங்க. சும்மா சூப்பரா பறந்து போகும்.


தேவையானவை:
இட்லி - 6
தக்காளி  - 3
பெரிய வெங்காயம் -2
ப. மிளகாய்-2
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு- தலா 1 டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
லவங்கம் - 3
சோம்பு - சிறிது
இஞ்சி - சிறிது
பூண்டு - 5 பற்கள்
எண்ணெய் - 2 டே. ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொத்துமல்லி - - சிறிது.

செய்முறை:
ட்லிகளை குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து எடுத்து உதிர்த்தால் பொல பொலவென சீராக உதிரும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு தாளித்து மேலும் பட்டை, லவங்கம்,சோம்பு, கருவேப்பிலை தாளித்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி பூண்டையும் போட்டு நன்றாக வாசம் வரும் வரை வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
எது வெற்றி? எது தோல்வி?
இட்லிகள் மீந்து விட்டதா? கவலையை விடுங்க… ஈஸியா செய்யலாம் தக்காளி இட்லி உப்புமா!

வாசம் வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளிகளை போட்டு நன்கு வதக்கவும். கூடவே மஞ்சள் தூள் தேவையான உப்பையும் சேர்க்கவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்ததும், அதில் உதிர்த்து வைத்துள்ள இட்லிகளை போட்டு நன்கு கலக்கவும். நன்றாக சூடு ஏறியதும் கிளறி (புதினா வாசம் பிடித்தவர்கள் மேலே புதினா தூவலாம்) எடுத்து மேலே நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம். உடனடியாக செய்யக்கூடிய சூப்பரான தக்காளி இட்லி உப்புமா ரெடி.


இதற்கு தொட்டுக்கொள்ள பூண்டு சட்னி, தேங்காய் சட்னி இரண்டும் சூப்பர் காம்பினேஷன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com