நார்த்தங்காய் கொத்சு! (பச்சடி)

நார்த்தங்காய் கொத்சு
நார்த்தங்காய் கொத்சு
Published on

மாங்காய் பச்சடி போல் நார்த்தங்காயிலும் பச்சடி செய்யலாம். இதனை மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும். பத்து நாள் வைத்திருந்தாலும் கெடாது. ஜீரணக் கோளாறு, உடல் வலி, மூட்டு வலி ஆகியவற்றிற்கு சிறந்தது.

நார்த்தங்காய் 5 

பச்சை மிளகாய் 4 

சாம்பார் பொடி ஒரு ஸ்பூன்

உப்பு தேவையானது 

மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் 

புளி எலுமிச்சை அளவு 

கட்டிப் பெருங்காயம் சிறு துண்டு

வெல்லம் ஒரு கட்டி

தாளிக்க: 

கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் 4, நல்லெண்ணெய்

இந்த பச்சடியை நல்லெண்ணையில் செய்ய ருசியும் மணமும் அதிகரிக்கும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கீறிய பச்சை மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து கடுகு நன்கு பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள நார்த்தங்காய் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு புளியை நீர்க்க கரைத்து விட்டு கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் பொடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விட ருசியான நார்த்தங்காய் பச்சடி தயார். 

இதையும் படியுங்கள்:
கதை சொல்லிகளும் கதைகளும் எதை உணர்த்துகின்றன?
நார்த்தங்காய் கொத்சு

இது ஒரு பாரம்பரியமான உணவு. நிறைய பேர் மறந்து போன ரெசிபியும் கூட. செஞ்சு பாருங்க... இதன் மகிமை புரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com